Saturday, August 19, 2017

இரவு நேரத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம்; புறநகர் ரயில் நிலையங்களில் போலீஸ் அதிரடி
பதிவு செய்த நாள்19ஆக2017 00:01

சென்னை : புறநகர் ரயில் நிலையங்களில், இரவு நேரத்தில் வெளி ஆட்கள் நடமாட்டத்தை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.சென்னையில், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில், கடற்கரை - தாம்பரம் இடையே, பயணியர் கூட்டம் அதிகஅளவில் உள்ளது.
கண்காணிப்புரயில் மற்றும் நிலையங்களில், பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டாலும், இரவு நேரத்தில், வெளி ஆட்கள் இருக்கைகளில் படுத்துக் கொள்வது, குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்து குளிப்பது, உணவுக் கழிவுகளை போடுவது தொடர்ந்து வந்தது. ரயில் நிலைய பிளாட்பாரம் மற்றும் நடை மேம்பாலங்களில், இரவு நேரத்தில் வெளி ஆட்கள் நடமாட்டத்தை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் அதிரடி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையம் இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், இரவு, 10:00 முதல், 12:00 மணி வரை, ரயில்வே பாதுகாப்பு படையினர், ஒரு நிலையத்திற்கு மூன்று பேர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, பயணியர் அல்லாதோர் மற்றும் பிளாட்பார இருக்கைகளில் அமர்ந்திருப்போரை கண்காணித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு படைசென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு, இரவு, 11:05, 11:30 மற்றும் 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களிலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு, இரவு, 11:00, 11:30, 11:55 மணிக்கு இயக்கப்படும் ரயில்களிலும், கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த முடிவு ய்யப்பட்டுள்ளது.ரயிலில் செல்லும் இவர்கள், வழியில் உள்ள நிலையங்களில் இறங்கி, நிலையங்களில் வெளி ஆட்கள் நடமாட்டத்தை கண்காணித்து அப்புறப்படுத்திவிட்டு, கடைசி ரயிலில் தாம்பரம் மற்றும் கடற்கரை ரயில் நிலையம் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024