Saturday, August 19, 2017

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கட்டாயம் : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., கண்டிப்பு
பதிவு செய்த நாள்18ஆக2017 23:49

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், மாறும் தொழில் நுட்பம், பாடத்திட்ட மாற்றம், புதிய பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர்களுக்கான கற்பித்தலுக்கு, ஆசிரியர்கள் தயார் செய்யப்படுகின்றனர். இதற்காக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சில, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதில்லை என, புகார்கள் எழுந்தன. இதனால், 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், ஆசிரியர்களுக்கு, குறைந்த பட்சம், ஒரு வாரம் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தலைவர், ஆர்.கே.சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம் என்ற பட்டியலும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024