சென்னை - மதுரை 2வது ரயில் பாதை டிசம்பருக்குள் மின் மயமாகும்
பதிவு செய்த நாள்15ஆக
2017
22:44
திருச்சி, :திருச்சி கோட்ட ரயில்வே பயிற்சி மையத்தில் நடந்த, சுதந்திர தினவிழாவில், கோட்ட மேலாளர் உதயகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு
மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:சென்னை - மதுரை வரை, 497 கி.மீ.க்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு, மின் மயமாக்கப்படுகிறது. எஞ்சியுள்ள, 25 கி.மீ.,க்கு, இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு, டிசம்பர் மாதத்துக்குள் மின் மயமாக்கும் பணிகள் முடிக்கப்படும்.
பொன்மலை - தஞ்சாவூர் இடையிலான, 47 கி.மீ., வழித்தடமும், இந்த ஆண்டுக்குள் இரட்டை ரயில் பாதையாக்கப்படும். ரயிலை சுத்தமாக வைத்திருக்க துவங்கப்பட்டுள்ள புதிய ஆப் வழியாக பயணிகள் தரும் புகார், 30 நிமிடங்களில் சரி செய்யப்படும். தென்னக ரயில்வேயில், 40 சதவீதம் ரயில் பெட்டிகளில், 'பயோ டாய்லெட்' பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment