சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை
பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:14
சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை, விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில், 5.7 செ..மீ., மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில், கோடையின் தாக்கம் முடிந்தும், வெயில் சுட்டெரிக்கிறது. காற்றில் ஈரப்பதம் குறைவால், இரவில், புழுக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, விடிய, விடிய, நேற்று அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஏற்காட்டில், அதிகபட்சமாக, 5.7 செ.மீ., மழை பதிவானது. மலைப் பாதையில், மண்சரிவு ஏற்பட்டதோடு, 10வது கொண்டை ஊசி வளைவில், பாறைகள் உருண்டு, பாதையில் விழுந்தன. பின், அவை அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது.
மேட்டூரில், நேற்று அதிகாலை, சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல், பஸ் ஸ்டாண்ட் அருகே வைத்திருந்த, பேனர்கள் சாய்ந்தன.
No comments:
Post a Comment