ஜெயலலிதா மறைந்து, எட்டு மாதங்களுக்கு பின், அவரது மரணம் குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக் கப்பட உள்ளது. அவர் வசித்த, சென்னை, போயஸ் தோட்ட வீடும் அரசுடமையாக்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசையும், அமைச்சர்களையும் மிரட்டும் தினகரன் கும்பலுக்கு பீதி ஏற்படுத்தும் விதமாக, இந்த அதிரடி அறிவிப்புகளை, நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், . சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; டிச., 5ல், இறந்தார். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், 'ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது அது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், ஆட்சி அதிகாரத்தை மறைமுகமாக கையில் வைத்திருந்த சசிகலா தரப்பினர், அதை கண்டுகொள்ளவில்லை. ஆட்சியாளர்களும், அதற்கு துணை போயினர். தற்போது, ஆளும் கட்சியிலும், ஆட்சியிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. சசிகலா குடும்ப ஆதரவால், ஆட்சிப் பொறுப்பேற்றமுதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அந்த குடும்பத்தின் பிடி யில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளனர்.
அதற்கான நடவடிக்கைகளின் துவக்கமாக, 'துணை பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப் பட்டது செல்லாது' என, அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்களை கூட்டி, முதல்வர் பழனிசாமி, அதிரடி
தீர்மானம் நிறைவேற்றினார். அதனால், ஆத்திர மடைந்த தினகரன்,தனக்கென ஆதரவு அணியை உருவாக்கி, கட்சியை கைப்பற்ற, காய் நகர்த்தி வருகிறார்.
அவர் பக்கம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களை காட்டி, முதல்வர் பழனிசாமியையும், அமைச் சர்களை யும் பகிரங்கமாக மிரட்டத் துவங்கி உள்ளார். 'எனக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்து, அமைச்சர்கள் அனைவரும், என் பக்கம் வராவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும் எச்சரித்து உள்ளார்.
இந்நிலையில், பகிரங்கமாக மிரட்டும் தினகரன் கும்பலுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக, இந்த இரண்டு அதிரடி அறிவிப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டு உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
ஜெ., இறப்பு குறித்து, விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில், ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும். நீதிபதி பெயர், பின்னர் அறிவிக்கப்படும். குறுகிய காலத்தில், அறிக்கை சமர்ப் பிக்க உத்தர விடப்படும். சென்னை,போயஸ் தோட்டத்தில்,ஜெ., வாழ்ந்த, 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவிட மாக்கி, பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக் கும் படி, பல்வேறு தரப்பினரிடம் இருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன.
ஜெ.,யின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் அறியும் வகையில், அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு, அரசு நினைவிடமாக மாற்றப் பட்டு, பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக் கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.
-நமது நிருபர்-
No comments:
Post a Comment