சேலையூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையை அடுத்த சேலையூர் அருகே அகரம் தென் கிராமம் அன்னை சத்யா நகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மதுக்கடையை மூடக்கோரி
யும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக மதுக்கடையை மூடவேண்டும். இல்லாவிட்டால் நாங்களே கடையை அடித்து நொறுக்குவோம் என்று கூறிய பொதுமக்கள், மதுக்கடை முன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் தொகுதி
தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் பொதுமக்களுக்கு ஆதரவாக அவர், போலீசாரிடம் பேசினார். உடனடியாக மதுக்கடையை மூடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. சமாதானம் செய்து கலைந்து போக செய்தார்.
No comments:
Post a Comment