'நீட்' தேர்வு இழுபறி; இப்போதைக்கு முடிவுறாது!
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வான, 'நீட்'டில் இருந்து விலக்கு கோரும், அவசர சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடர்வதற் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அவசர சட்டத்தால், மாநில பாடத் திட்டத்தில் படித்து, நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பாதிக் கப்படும் சூழல் உள்ளதால், அவர்கள் தரப்பில், நீதிமன்றத்தை அணுக உள்ளனர்.நீட் தேர்வுக்கு, 2016 - 17ம் ஆண்டில் மட்டும், தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க, தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு, இதுவரை ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் புதிய உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்தது.
அதுவும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன் றத்திலும் அடி வாங்கியது. அதனால், அவசர சட்டம் கொண்டு வருவது தவிர, வேறு வழியில்லை என்ற ரீதியில், தற்போது, மத்திய அரசிடம், அவசர சட்டத்தின் வரைவு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக் கீட்டுக்கான இடங்களுக்கு, நீட் தேர்வில், இந்த ஆண்டு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ரீதி யில், அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது.
மத்திய அரசும், அவசர சட்டத்துக்கு ஆதரவு தெரி விப்பதால், ஜனாதிபதியின்ஒப்புதல் கிடைப்பதில், எந்த சிக்கலும் இருக்காது. இருந்தாலும், அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர, பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் தயாராகின் றனர்.
சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடுத்தாலும், மாநில பாடத்திட்டத்தில் படித்த வர்களும், நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பு கள் உள்ளன.
பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்ணும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்ற, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, நீட் இல்லை என்றால், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். நீட் வரும் என்ற எதிர்பார்ப்பில், பிளஸ் 2 தேர்வுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக் காமல், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் இவர்கள்.
அவசர சட்டம் குறித்து, வழக்கறிஞர் பி.வில்சன் கூறும்போது,அவசர சட்டமும், நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது தான்; அதை எதிர்த்து வழக்கு தொடர முடியும். அதேநேரத்தில், அவசர சட்டம் கொண்டு வர, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தங்கசிவன் கூறும் போது, ''நீட் தேர்வு விலக்கால், மாநில பாடத்திட்டத் தில் படித்து, நீட் எழுதியவர்கள், தங்களுக்கு பாதிப்பு வரும் என கருதும்போது, அதை எதிர்த்து வழக்கு தொடர்வர். மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வு
கட்டாயம் என்ற எதிர்பார்ப்பில், அதற்கு தயா ராகி இருப்பர். சட்டப்படியான இந்த எதிர்பார்ப் பில் பாதிப்பு வரும்போது, அதே முகாந்திரத் தின் அடிப்படையில், வழக்கு தொடர முடியும்,'' என்றார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறும்போது, ''அவசர சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம்; உச்ச நீதிமன்றத்திலும் தொடர லாம். எந்த அடிப்படையில், அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது என்பதை பொறுத்து, கேள்விக்கு உள்ளாக்கப்படும். பொது பட்டிய லில் கல்வி வருவதால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டமான, மத்திய அரசு சட்டத்தை மீற முடியாது.
எனவே, நீட் தேர்வுக்கு, நிரந்தர விலக்கு கோர முடியாது,'' என்றார்.உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கினாலும், அடுத்த கட்டமாக, உச்ச நீதிமன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் அணுகுவர். அதனால், உச்ச நீதிமன்றத்தில் தான், இந்தப் பிரச்னைக்கு விடை கிடைக்கும் என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.
-நமது நிருபர்-
No comments:
Post a Comment