நள்ளிரவில் அதிரடி காட்டிய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி!
புதுச்சேரியில் இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய நகரின் பல பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரகசிய நகர்வலைத்தை மேற்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார்.
புதுச்சேரி மாநிலத்துக்கு துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வார இறுதி நாள்களில் புதுச்சேரியின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்து மக்களிடம் குறை கேட்பது, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஏரி, குளங்கள் போன்றவற்றை அதிகாரிகளுடன் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதன்படி இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய நம் மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று (18.08.2017) நள்ளிரவு ஆளுநர் மாளிகை ஊழியர் ஆஷா குப்தாவுடன் இருசக்கர வாகனத்தில் ரகசிய நகர்வலத்தை மேற்கொண்டார். பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் ரகசியமாக ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது என்றும் சில இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Dailyhunt
No comments:
Post a Comment