Sunday, February 11, 2018

சதாப்தி ரயிலில், 'ஏசி' சொகுசு பெட்டி

Added : பிப் 11, 2018 01:18

சென்னை:சென்னை, சென்ட்ரலில் இருந்து, கர்நாடக மாநிலம், மைசூருக்கு இயக்கப்படும், சதாப்தி ரயிலில், பல வசதிகளுடன் கூடிய, 'ஏசி' சேர்கார் பெட்டியொன்று இணைக்கப்படுகிறது.

இந்தியன் ரயில்வேயில், நல்ல நிலையில் உள்ள ரயில் பெட்டிகள், 'ஸ்வர்ண' என்ற திட்டத்தின்படி, சொகுசு வசதி பெட்டிகளாக மாற்றி அமைக்கப்படுகின்றன.அந்த வகையில், சதாப்தி ரயிலின், 28 சேர்கார் பெட்டிகள், சொகுசு வசதி பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அப்படி மாற்றப்பட்ட, பெட்டிகளில் ஒன்று, இன்று முதல், சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இயக்கப்படும், சதாப்தி ரயிலில், இணைத்து இணைக்கப்படுகிறது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட மூத்த இயந்திரவியல் பிரிவு மேலாளர், பரிமளக்குமார் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில், 'ஸ்வர்ண' திட்டத்தில், முதல் கட்டமாக, இரண்டு சொகுசு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகள், 160 கி.மீ., வேகத்திலும் இயங்கக்கூடியவை.மைசூரு சதாப்தி ரயிலில், ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.விரைவில், சென்ட்ரல் - கோவை சதாப்தி ரயிலிலும், ஒரு பெட்டி இணைக்கப்படும். இதற்கு, பயணியரிடம் கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்ப, இந்த ரயில்களில், கூடுதல் பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வசதிகள் என்ன?

* சொகுசு பெட்டி முழுவதும், 'ஏசி' வசதி செய்யப் பட்டுள்ளது. புஸ்பேக் வசதியுடன், 78 இருக்கைகள் உள்ளன. பெட்டியின் மையப்பகுதியில், இருக்கைகளுக்கு இடையே, உணவு சாப்பிட வசதியாக, இரு டேபிள்கள் பொருத்தப் பட்டுள்ளன. இருக்கைக்கு மேல், உடைமைகளை வைக்க, இடவசதி செய்யப்பட்டுள்ளது

* பெட்டியின் உள்பகுதியில், அழகான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. பெட்டியின், நான்கு கதவுகள் அருகிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்டி முழுவதும், எல்.இ.டி., விளக்குகளும், படிப்பதற்கு ஏதுவாக, இருக்கைக்கு மேற்பகுதியில், தனியாக சிறிய, எல்.இ.டி., விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன

* உணவு பண்டங்கள் சூடாக வைக்க வசதியாக, கதவருகில், சிறிய கிச்சன் வசதியும் உள்ளது. பார்வையற்றோர் இருக்கைகளை எளிதாக தெரிந்து கொள்ள, 'ப்ரெய்லி' எழுத்தில் எண்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன கழிப்பறை வசதி உள்ளது

* பயணத்தில், ரயில் கடந்து செல்லும் பகுதிகளை பார்த்து ரசிக்க, அகலமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்டியினுள், எல்.இ.டி., விளக்கு வெளிச்சத்துடன், ஜன்னல் கண்ணாடி வழியாக, சூரிய ஒளியும் புகுவதால், பெட்டியின் உட்பகுதி பார்க்க, ரம்மியமாக உள்ளது.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...