Sunday, February 11, 2018

பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்ட பெண் நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவு

Added : பிப் 11, 2018 04:19


சென்னை:விண்ணப்பத்தில், பிறந்த தேதியை தவறுதலாக குறிப்பிட்ட பெண்ணை, நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கும்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறைகூற முடியாது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, தாஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர், அமுதினி; 'குரூப் - ௨' பணியிடங்களுக்காக நடந்த, ஆரம்பகட்ட தேர்வு, எழுத்து தேர்வில், வெற்றி பெற்றார்; நேர்முக தேர்வுக்கு, அழைப்பு கடிதம் வரவில்லை.'தகுதி நிபந்தனையை பூர்த்தி செய்திருக்கவில்லை' என, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டி
ருந்தது.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமுதினி மனு தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், யு.எம்.ரவிச்சந்திரன், ''விண்ணப்பத்தில், பிறந்த தேதியாக, ௬.௨.௧௯௯௩ என குறிப்பிடுவதற்கு பதில், தவறுதலாக, ௬.௧௨.௧௯௯௩ என, குறிப்பிட்டு விட்டார். ''வனத்துறையில் உதவியாளராக பணியாற்றும் அமுதினிக்கு எதிராக, துறை நடவடிக்கை, தண்டனை எதுவும் கிடையாது. தவறுதலாக நடந்து விட்டதே தவிர, ஆதாயம் பெறும் நோக்கம் எதுவும் இல்லை,'' என்றார்.

அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லோகநாதன், ''தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், விண்ணப்பத்தில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அது நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, சரியாக நிரப்பவில்லை. எனவே, நிராகரித்ததை குறை கூற முடியாது,'' என்றார்.

ஆட்சேபனை இல்லை

மனுவை விசாரித்த, நீதிபதி, டி.ராஜா பிறப்பித்த உத்தரவு:பிறந்த தேதியை தவறுதலாக குறிப்பிட்டு விட்டார். தலைமை வனப் பாதுகாவலர் அளித்த சான்றிதழில், 'மனுதாரருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை; எந்த தண்டனையும் இல்லை; அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க, ஆட்சேபனை எதுவும் இல்லை' என, கூறப்பட்டு உள்ளது.இதுபோன்ற வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஆதாயம், சலுகை பெறும் நோக்கம் இல்லை என்பதால், மனுதாரரின் விண்ணப்பத்தை, தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும். நேர்முக தேர்வில் கலந்து கொள்ள மனுதாரரை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...