Saturday, February 3, 2018

வைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பக்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்: சடகோப ராமானுஜ ஜீயர்

By DIN | Published on : 03rd February 2018 08:03 AM |

வைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பக்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது, இது குறித்து கவிஞர் வைரமுத்து உடனடியாக விளக்கம் அளித்தார்.

“யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும் அவர் ஆண்டாள் கோவில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

இந்நிலையில் மன்னிப்பு கேட்பது குறித்து வைரமுத்து தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பக்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025