Friday, February 23, 2018


தெய்வமகளில் நடித்த ரீல் ஜோடிகளின் ரியல் ஜோடிகள்! (புகைப்படம்)

By ராக்கி | Published on : 22nd February 2018 06:27 PM |


இன்றைய அவசர வாழ்க்கையில் தியேட்டருக்குச் சென்று சினிமா பார்க்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் பலர் வீட்டிலேயே சின்னத் திரையில் புதுப் புது சீரியலில் செட்டில் ஆகிவிட்டனர். அதற்கேற்ப தற்போது தயாரிக்கப்படும் சீரியல்கள் சினிமாவில் கூட நம்ப முடியாத காட்சிகளையும் கதைகளையும் கொண்டு ரசிகர்கள் மட்டுமல்லாது யாருடைய கற்பனையையும் எட்ட முடியாத லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

பிரபல தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த மெகா தொடர் தெய்வமகள். அதில் நடித்த கதாபாத்திரங்களை தாங்கள் மிஸ் செய்வதாக பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டு வருகிறார்கள். தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேலாக இத்தொடர் மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்று வந்தது. ஒரே நாளில் ஒரே ஒரு எபிசோட்டுக்கு குறைந்தது ஒரு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை கொண்ட சூப்பர் ஹிட் தொடர் அது.தெய்வமகளில் நடித்த கதாபாத்திரங்களை தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உணர்ந்துதான் இத்தகைய வெற்றியை அத்தொடருக்குப் பெற்றுத் தந்தனர் அதன் ரசிகர்கள். இத்தொடரில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களின் தங்கள் ரியல் ஜோடியுடன் எடுத்துக் கொண்ட படங்களை பகிர்ந்து மகிழ்கிறார்கள் அதன் தீவிர ரசிகர்கள்.

**







No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...