Tuesday, February 6, 2018

லஞ்சப்புகாரில் கைதான துணைவேந்தர் கணபதி பணி இடைநீக்கம்: ஆளுநர் உத்தரவு

Published : 06 Feb 2018 21:45 IST

சென்னை

ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்று கைதான துணைவேந்தரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் ஆளுநர் புரோஹித், துணைவேந்தர் கணபதியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ரூ.30 லட்சம் லஞ்சப் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். 24 மணி நேரம் கடந்தால் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற விதியிருந்தும் இதுவரை பணியிடை நீக்கம் செய்யாததால் பல்கலைக்கழகப் பணிகள் முடங்கியுள்ளன. பதிவாளர் உள்ளிட்டோர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

'துணை வேந்தர் மீதான கைது நடவடிக்கை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு உள்ளிட்ட எதுவுமே பல்கலைக்கழகத்துக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. உயர் கல்வித் துறையில் இருந்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை. எல்லோரையும் போல நாங்களும் காத்திருக்கிறோம் என்று பல்கலைக்கழக பதிவாளர் அனிதா தெரிவித்திருந்தார்.

இதனிடையே துணைவேந்தரைப் பணியிடை நீக்கம் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் துணைவேந்தரை இடைநீக்கம் செய்யவேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் உத்தரவில் கணபதி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை ஆளுநருக்கு அறிக்கை அனுப்பியதை அடுத்து கணபதி பிப்.6 முதல் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

அடுத்த உத்தரவு வரும் வரை இடைநீக்கம் தொடரும் என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...