Tuesday, December 25, 2018

'தொடர்பில்லாத ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க தடை'

Added : டிச 25, 2018 04:22

கோவை: 'தொடர்பில்லாத ஆராய்ச்சி கட்டுரைகளை, நர்சிங் கல்லுாரி மாணவர்கள் சமர்ப்பிக்க கூடாது' என, நர்சிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. கல்லுாரிகளில், பி.எஸ்.சி., - எம்.எஸ்.சி., நர்சிங் உட்பட, பல படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இங்கு படிப்போரின் ஆராய்ச்சி கட்டுரைகள், தமிழக மருத்துவ சேவை கழகத்தால் வெளியிடப்படும் புத்தகங்களில் பிரசுரிக்கப்படுகின்றன. இந்நடவடிக்கையை, தமிழக நர்சிங் கவுன்சில் கண்காணித்து வருகிறது.சமீபகாலமாக, மாணவர்கள், நர்சிங் துறைக்கு தொடர்பில்லாத பிற தலைப்புகளில், ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பது தெரிந்தது. இதையடுத்து, 'மாணவர்கள், நர்சிங் துறை தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை, அனைத்து, பி.எஸ்சி., மற்றும், எம்.எஸ்சி., கல்லுாரி முதல்வர்களும் உறுதி செய்ய வேண்டும்' என,உத்தரவிடப்பட்டுள்ளது.மாநில நர்சிங் கவுன்சில் பதிவாளர், ஆனி கிரேஸ் கலைமதி வெளியிட்ட அறிக்கை:அனைத்து நர்சிங் கல்லுாரி முதல்வர்களும், மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய வேண்டும். அது, நர்சிங் துறை தொடர்பானதாகவும், அதன் வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.நோயாளிகளின் நலம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு, ஆராய்ச்சி வழிகாட்டும் குழு பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024