Tuesday, December 25, 2018


ரூ.3 கோடி கடன் மோசடி; டாக்டர்களுக்கு சிறை

Added : டிச 25, 2018 04:20

மதுரை: மதுரை மேலமாசி வீதியில், கார்ப்பரேஷன் வங்கி கிளை உள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்குவதாகக்கூறி, போலி ஆவணங்கள் தயாரித்து, 3 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி கிளை மேலாளர் குமார், மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஜல ஜவஹர் உட்பட சிலர் மீது, சி.பி.ஐ., போலீசார் வழக்குப் பதிந்தனர்.குமார், டாக்டர்கள் ஜல ஜவஹர், சுப்பிரமணியன், ராஜவேல், பானுமதி, சுந்தரராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த மருத்துவ உபகரண வினியோக நிறுவன நிர்வாகி சண்முகவேல் ஆகியோருக்கு, தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மதுரை, சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024