நிபுணத்துவ டாக்டர்கள் பற்றாக்குறை : எம்.சி.ஐ., தலைவர் தகவல்
Added : டிச 24, 2018 23:33
சென்னை: ''தேசிய அளவில் நிபுணத்துவம் வாய்ந்த, டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது,'' என, இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாக குழு தலைவர், வினோத் கே பவுல் கூறினார்.சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி பல்கலை கருத்தரங்கம், நேற்று நடந்தது. இதில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜய பாஸ்கர், நிடி ஆயோக் உறுப்பினரும், இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாக குழு தலைவருமான, வினோத் கே பவுல், எம்.ஜி.ஆர்., பல்கலை துணை வேந்தர், கீதாலட்சுமி மற்றும், 13 மாநில மருத்துவ பல்கலை துணை வேந்தர்கள் பங்கேற்றனர்.1 லட்சம் மக்கள்இந்த கருத்தரங்கில், வினோத் கே பவுல் பேசியதாவது:மத்திய அரசு, ஆண்டுக்கு, மூன்றில் இரண்டு பங்கு நிதியை, சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகளுக்கு ஒதுக்குகிறது. இந்தியாவில், ஒரு லட்சம் மக்களுக்கு, எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள், 42 பேர் உள்ளனர். ஆனால், துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த, டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.இதில், ஒரு லட்சம் மக்களுக்கு, ஐந்து பேர் என்ற வீதத்தில், நிபுணத்துவ டாக்டர்கள் உள்ளனர். பிரேசில், ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளை போல, நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.பல்கலை தரத்தை உறுதி செய்தல், தற்போதைய சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் கொண்டு வருதல், பிற பல்கலையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தேசிய மருத்துவ ஆணைய மசோதா, பார்லிமென்ட் நிலை குழு பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா, எந்த மாநிலமும் பாதிக்கப்படாதவாறு தாக்கல் செய்யப்படும். தேசிய அளவில், சுகாதார துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தேசிய அளவிலான மருத்துவ சேவையில், இரண்டாம் இடத்தில் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ரூ.250 கோடிஅமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ''தேசிய அளவில், அதிக மருத்துவ இடங்கள், தமிழகத்தில் உள்ளன. ''கரூரில், 250 கோடி ரூபாய் செலவில், 150 மருத்துவ இடங்களுடன், கல்லுாரி துவங்கப்பட உள்ளது. மேலும், பல மருத்துவக் கல்லுாரிகளிலும், இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment