Tuesday, December 25, 2018


வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

Added : டிச 24, 2018 23:29 |



சென்னை: வங்கிகள் இணைப்பை எதிர்த்து, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும், நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கிறது.பாங்க் ஆப் பரோடா வங்கியுடன், விஜயா வங்கி, தேனா வங்கிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்து, மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன், அறிவிப்பு வெளியிட்டது. பாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பின், இரண்டாவதாக, இந்த மூன்று வங்கிகள் இணைப்பு நடைபெற உள்ளது.இதனால், வங்கிகளின் வராக் கடனை மீட்பதில் பிரச்னை, ஊழியர்களுக்கு வேலை இழப்பு போன்றவை ஏற்படும் எனக்கூறி, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்காக, நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என, 10 லட்சம் பேர், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இந்நிலையில், சென்னை, எழும்பூரில் உள்ள, விஜயா வங்கி கிளை முன், இணைப்பை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும், இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024