அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு
Added : ஜூன் 12, 2019 22:20
சென்னை: மருத்துவப் படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, வரும், 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும், அரசு மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை மற்றும் மத்திய மருத்துவப் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், 15 சதவீதம் இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கின்றன.தமிழகத்தில், 23 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., 3,250 - பி.டி.எஸ்., 100 இடங்களில் இருந்து, 506 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.நடப்பு கல்வியாண்டுக் கான, மாணவர் சேர்க்கை, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்பட உள்ளது.
முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு, 'நீட்' தேர்வில் தகுதி பெற்றவர்கள், இணையதளத்தில், 19 முதல், 24ம் தேதி வரை பதிவு செய்து, கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்.தாங்கள் தேர்வு செய்த கல்லுாரியை, 25ம் தேதி உறுதி செய்ய வேண்டும். தர வரிசை பட்டியல் அடிப்படையில், இட ஒதுக்கீடு செய்யும் பணி, 26ம் தேதி நடைபெறும். இட ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள், 27ம் தேதி வெளியிடப்படும். கவுன்சிலிங்கில் இடங்களை பெற்றவர்கள், 28ம் தேதி முதல், ஜூலை, 3ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு, ஜூலை, 6 முதல், 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment