Saturday, March 7, 2015

ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.400 ஆனது!

சென்னை: தமிழகத்தில் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட் தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சிமென்ட் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிமென்ட் விலை மேலும் உயர்ந்துள்ளது.

இது குறித்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் சிமென்ட் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தென்னிந்தியாவில் உள்ள சிமென்ட் உற்பத்தி ஆலைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு 130 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது தற்போது பாதியாக குறைந்துவிட்டது. சிமென்ட் தேவை குறைந்ததே இதற்கு காரணம். அரசு கொள்முதல் செய்யும் சிமென்ட் அளவும் குறைந்துவிட்டது. இதனால், சிமென்ட் ஆலைகளில் ஒரு மாதத்துக்கு 13 நாட்கள் மட்டுமே உற்பத்தி நடக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு மூட்டை சிமென்ட் 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது சிறிது சிறிதாக விலையேறி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 400 ரூபாயை எட்டியது. ஆலைகள் தமிழக அரசுக்கு சிமென்ட்டை குறைந்த விலைக்கு கொடுப்பதால், வெளிச் சந்தையில் எவ்வளவு விலை அதிகரித்து விற்றாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிமென்ட் நிறுவனங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றி வருகின்றன" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024