Saturday, June 6, 2015

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக...எளிதாக...!

த்திர, அவசரத்திற்கு ரயிலில் தொலை தூரங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் முறையிலான டிக்கெட். ஆனால் தட்கலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதென்பது அத்தனை சுலபமானதாக இருந்ததிலை.
முன்பதிவு கவுண்டர்களில் முந்தைய நாள் இரவிலேயே காத்துக்கிடந்தும், புக்கிங் தொடங்கிய 3 அல்லது 4 நிமிடங்களிலேயே "வெயிட்டிங் லிஸ்ட்தான்...!" என்று கவுண்டரிலிருந்து வரும் குரலை கேட்டு கடுப்பானவர்களுக்கும்,  காலை 10 மணிக்கு தொடங்கும் முன்பதிவுக்கு 9.30 மணிக்கே கம்ப்யூட்டரை ஆன் செய்து,  ஸ்கிரீனையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு புக்கிங்கிற்கான விவரங்களை பதிவு செய்து பேமண்ட் கேட்டுக்கு செல்லும் தருவாயில் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மறுபடியும் மொதல்ல இருந்து கதையாக ஆரம்பிக்கும்போது, 'வெயிட்டிங் லிஸ்ட்'  என்று காண்பிக்கும்போதும் வருமே வெறுப்பும்...ஆத்திரமும்...அதனை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. 

'ஏஜெண்டுகள் மொத்தமாக லவட்டி விடுகிறார்கள், ஐஆர்சிடிசி சைட் ரொம்ப ஸ்லோ...!' என்றெல்லாம் டிக்கெட் கிடைக்காதவர்கள் மூலம் வெளிப்பட்ட விரக்தி புலம்பல்கள் ஐஆர்சிடிசி இணைய நிர்வாகத்திற்கு எட்டியதோ என்னவோ...பீக் அவர் எனப்படும் முன்பதிவு தொடங்கும் காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு வேகத்தை இரு மடங்காக ஆக்கி, முன்பதிவை எளிமையாக ஆக்கி உள்ளது. 

இதற்காக முன்பதிவுக்குரிய இரண்டு உயர் திறன் சர்வர்களை ஐஆர்சிடிசி நிறுவியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் கடந்த 30 ஆம் தேதி வரை நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகளாக இருந்த முன்பதிவு திறன், தற்போது 14,000 டிக்கெட்டுகளாக அதிகரித்துள்ளது. 

இத்தகவலை ஐஆர்சிடிசி தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஏ.கே. மனோச்சா, மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் ஆக்கப்பூர்வமான பலன்கள் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். 

தற்போது நாடு முழுவதும் 54 சதவீத டிக்கெட்டுகள் ஆன் லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 5.5 முதல் 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024