Monday, June 29, 2015

நுழைவுத்தேர்வு ‘ஹால் டிக்கெட்’டில் குளறுபடி: மாணவர் படத்துக்கு பதிலாக ‘நாய்’ படம் இடம்பெற்றதால் பரபரப்பு


கொல்கத்தா

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் இடம்பெறும் குளறுபடிகளுக்கு அளவே இல்லை. ஆணின் படத்தை போட்டு பெண்ணின் பெயர் இடம்பெறும். சில நேரங்களில் படமே மாறி விடும்.

ஆனால் இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், மாணவரின் படத்திற்கு பதிலாக ஒரு நாயின் படத்தை போட்டு நுழைவுச்சீட்டு வழங்கிய சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்து உள்ளது.

அங்குள்ள மிட்னாபூரைச் சேர்ந்தவர் சோமியாதிப் மகாதோ (வயது 18). பிளஸ்–2 படித்துள்ள இவர், ஐ.டி.ஐ. படிக்க விரும்பினார். மேற்குவங்காள மாநிலத்தில் ஐ.டி.ஐ. படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்காக சோமியாதிப் மகாதோ விண்ணப்பித்து இருந்தார்.

தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’டை இணையதளம் மூலமாக அவர் பதிவிறக்கம் செய்தார். அப்போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது படம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு நாயின் படம் இருந்தது. ஆனால் சோமியாதிப் மகாதோவின் முகவரி மற்றும் மற்ற விவரங்கள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் செய்தார். இதனையடுத்து உடனடியாக நாயின் படம் அகற்றப்பட்டு, மாணவரின் படம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குளறுபடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...