Thursday, June 25, 2015

எம்.எஸ்.வியை கொண்டாடிய இசை அரங்கம்


ஜூன் 24 - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 87-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ‘எம்எஸ்வி டைம்ஸ்.காம்’ சென்னையில் ஒரு இசை அரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டிய இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘அன்பே வா’, ‘கௌரவம்’ ஆகிய படங் களில் அவர் பின்னணி இசைக்கோர்ப் பில் செலுத்திய நேர்த்தியை செல்லோ சேகர் (குன்னக்குடி வைத்தியநாதன் மகன்) இந்நிகழ்ச்சியில் விவரித்தார்.

‘தூது சொல்ல ஒரு தோழி’, ‘சட்டி சுட்ட தடா கை விட்டதடா’ ஆகிய பாடல்களில் உள்ள தனித்தன்மையை ‘கிடார்’ பாலா விளக்கிப் பேசினார். கரஹரப்ரியா ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் வெவ்வேறு நுட்பத்தைப் பயன்படுத்தி இசையமைத்ததை இசையமைப்பாளர் தாயன்பன் எடுத்துக்கூறினார்.

‘கலங்கரை விளக்கம்’, ‘உத்தர வின்றி உள்ளே வா’ ஆகிய படங்களில் இடம்பெற்ற டைட்டில் பாடல்களின் வழியே படத்தின் கதையைச் சொல் லும் எம்.எஸ்.வியின் தனித்த அடை யாளத்தை எடுத்துக்கூறினார், ஆடிட்டர் மற்றும் மெல்லிசைப் பாடகர் வி.பால சுப்ரமணியன். எம்.எஸ்.விஸ்வநாத னின் லய வேலைப்பாடல்கள் பற்றிய பரிணாமத்தை ‘வெள்ளிக்கிண்ணம் தான்’ உள்ளிட்ட சில பாடல்களை முன் னிலைப்படுத்தி எம்.எஸ்.சேகர் பேசி னார். நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி, திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்து ராமன், இசையமைப்பாளரும், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றியவரும், லால்குடி ஜெயராமனின் ‘தில்லானா’ இசைத்தட்டு உருவாக்கத்தில் மேற்கத் திய இசையமைத்து பியூஷன் இசைக்கு வழிவகுத்தவருமான ஷ்யாம் ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ராம் லஷ்மணன், எம்.எஸ்.வி. வைத்தி ஆகியோர் தொகுத்தளித்தனர்.

இந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வ நாதன் பற்றி நல்லி குப்புசாமி பேசிய தாவது:

30 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ்.வியோடு நெருங்கி பழகும் அனுபவம் பெற்றவன் நான். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை விழா வுக்கு அவரே நேரில் வந்து அழைப் பிதழ் கொடுப்பார். ‘எதுக்குங்க நீங்க வரணும். சொல்லி அனுப்பினா நான் வந் துடுவேனே’ என்று கூறினால்கூட கேட்க மாட்டார். அவர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வது பெருமையான விஷயம்.

எம்.எஸ்.விக்கு நடிக்க வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஒரு நாடகத்தில் கோவலன் வேடம் போடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் எம்.எஸ்.வி குட்டையாக இருப்பதால் அவர் தேர்வாகாமல் போய் விட்டார். ‘என்னை குட்டை என்று தவிர்த் தவர்கள், கண்ணகி வேடம் போட்டவரை நெட்டை என்று கூறி நீக்க வேண்டியது தானே’ என்று கோபப்பட்டார். ‘அதெல் லாம் விடுங்க சார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னைக்கு நாங்க இப்படி சிறப்பான பாடல்களை கேட்டி ருக்க முடியாதே’ என்று சொன்னோம்.

1973-74களில் தினம் ஜவுளிக் கடைக்கு போகிறேனோ இல்லையோ, கண்ணதாசனைப் பார்ப்பதற்காக கவிதா ஹோட்டலுக்கு சென்றுவிடு வேன். எம்.எஸ்.விக்கும் தனக்கும் உள்ள நெருக்கம், வேடிக்கையான அனுபவங் களை எல்லாம் கவிஞர் மணிக்கணக்கில் சொல்வார். அதுதான் நட்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்பி.முத்துராமன் பேசும்போது, “ஜெய்சங்கர் நடிப்பில் ‘துணிவே துணை’ படத்தை இயக்கினேன். படத் தில் முதல் சில காட்சிகளில் வசனம் இல் லாமல் எம்.எஸ்.வியின் திகில் இசை தான் முக்கிய அங்கமாக இருக்கும். அந்த இசை, படத்தை அவ்வளவு நேர்த்தியாக நகர்த்திச் செல்லும்.

ஒருமுறை, கண்ணதாசன் இறந்து விட்டார் என்று எம்.எஸ்.வி வீட்டுக்கு செய்தி வருகிறது. மார்பிலும், தலை யிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத படி கண்ணதாசன் வீட்டுக்கு போகிறார், எம்.எஸ்.வி. அங்கே ‘வாப்பா விசு’ என்று கண்ணதாசன் குரல் கேட்கிறது. ‘ஏண்ணே.. இப்படி!’ என்று படபடத்து நிற்கிறார்.

‘நான் இறந்துபோனால் நீ எப்படி கதறி அழுவாய் என்பதை நான் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தேன்’ என்று கண்ண தாசன் கூறியிருக்கிறார். அதுதான் நட்பு. கவியரசருக்கு சிலை வைத்த பெருமை எம்.எஸ்.விக்குத்தான் சேரும்’’ என்றார்.

ஷ்யாம் ஜோசப் பேசும்போது, “பாட்டை பாமர மக்களும் கேட்க வேண்டும். கேட்ட மாத்திரத்திலேயே அதை அவர்கள் பாட வேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு அவசியமாக இருந்தது. இசையில் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ரேன்ஞ் என்று ஒரு கட்டத்தை சொல்வோம்.

அதை எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்கிற வித்தை அறிந்தவர், எம்.எஸ்.வி. சங்கீதத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு மேல் செய்தவர் எம்.எஸ்.வி’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024