Wednesday, June 24, 2015

அடிக்கடி வாடகை வீடு மாறுவோருக்கும் பாஸ்போர்ட்

புனே : அடிக்கடி வாடகை வீடு மாறுபவரும், எளிதாக பாஸ்போர்ட் பெறும் புதிய வசதியை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, புனே பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஓராண்டுக்கும் மேற்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் வைத்திருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.ஆனால், புனே, பெங்களூரு போன்ற நகரங்களில் வசிக்கும் தொழில்நுட்ப துறையினர், பணி மாறுதல் காரணமாக, அடிக்கடி வீடு மாறுவர். இதனால், பாஸ்போர்ட் பெற முடியாமல் தவித்தனர். வாடகை ஒப்பந்த காலத்தை, ஓராண்டில் இருந்து குறைக்கும்படி வந்த கோரிக்கைகளை அடுத்து, காலக்கெடு குறைக்கப்பட்டு உள்ளது.
புதிய விதியின்படி, ஓராண்டிற்கும் குறைவான வாடகை ஒப்பந்த பத்திரம் வைத்திருப்போரும், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். இந்த ஒப்பந்த பத்திரம், பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். நோட்டரியிடம் கையெழுத்து பெறப்பட்ட வாடகை ஒப்பந்தம் செல்லாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024