புதுடெல்லி
விமான பயணிகள் 15 கிலோ வரை லக்கேஜூகளை கட்டணமின்றி விமானத்தில் எடுத்துச் செல்ல தற்போது அனுமதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்துவிட்டு பயணிகள் கொண்டு செல்லும் ஒவ்வொரு கிலோவுக்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று சில தனியார் விமான நிறுவனங்கள் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்தன. இதுபற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் லக்கேஜூகளுக்கு கட்டணம் வசூலிக்கவேண்டும் என்கிற பரிந்துரையை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு கொண்டு சென்றது. ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இது பற்றி சிவில் விமான போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி மகேஷ் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விமானங்களில் பயணிகள் ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்வது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் தெரிவித்த யோசனை ஏற்கப்படவில்லை. விமான பயணிகள் மீது நாங்கள் எந்த சுமையையும் ஏற்ற விரும்பவில்லை. இதில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்’’ என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment