Tuesday, June 23, 2015

ஜூலை 25ல் அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு!



புதுடெல்லி: அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடக்கிறது.

அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், இந்த தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதால், இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி, அரியானா மாநில மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், மே மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வு முடிவை வெளியிடவும் தடை விதித்த நீதிபதி, 4 வாரங்களில் மீண்டும் நுழைவுத் தேர்வை நடத்தி, ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் முடிவுகளை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. மேலும், மறு தேர்வுக்கு புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது எனவும், ஏற்கனவே விண்ணப்பித்தோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமும் தகவல் அனுப்பப்படும் எனவும், கூடுதல் விவரங்கள் www.aipmt.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024