Friday, June 26, 2015

மருத்துவக் கலந்தாய்வு: கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவக் கலந்தாய்வில், கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை அனுமதிக்கக் கூடது என்று கோரி, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் குறைந்திருப்பதால், கடந்தாண்டு மாணவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதித்தால், இந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கான வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கூறி 63 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, மருத்துவக் கலந்தாய்வை நடத்த அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், பழைய மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதித்தது. ஆனால், இட ஒதுக்கீட்டு ஆணையை மட்டும் வழங்க தடை விதித்திருந்தது.

இதற்கிடையே கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024