Tuesday, June 23, 2015

இந்திய செவிலியர்களை விரட்டும் இங்கிலாந்து..dinamalar 23.5.2015



லண்டன்: இங்கிலாந்தின் புதிய குடியேற்ற சட்ட விதிகள் காரணமாக, இந்தியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் செவிலியர்கள் வேலையிழந்து, தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.


இங்கிலாந்து அரசின் தேசிய சுகாதார சேவை திட்டத்தின் கீழ், அயல்நாடுகளில் இருந்து ஏராளமானோர், செவிலியர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். உள்நாட்டில், செவிலியர் பயிற்சி இடங்கள் குறைக்கப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து, செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டை அடுத்து, இந்தியாவில் இருந்து தான், ஆண்டுக்கு, 30 ஆயிரம் செவிலியர்கள், இங்கிலாந்து செல்கின்றனர். இவர்கள், ஆண்டுக்கு சராசரியாக, 21 லட்சம் ரூபாய் முதல், 28 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், ஐரோப்பா சாராத நாடுகளில் இருந்து குடியேறுவோரை கட்டுப்படுத்த, இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.


இதற்காக, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது. அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம், 35 லட்சம் ரூபாய் சம்பாதிக்காத குடியேறிகள், ஆறு ஆண்டுகளுக்குப் பின், நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.இத்திட்டம், 2011ம் ஆண்டு முதல், முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட, குறைவாக ஊதியம் பெறும் இந்திய செவிலியர்கள், 2017ல், தாயகம் திரும்ப வேண்டும்.




ஐரோப்பா அல்லாத நாடுகளை சேர்ந்த செவிலியர்களில், 90 சதவீதம் பேர், ஆறு ஆண்டுகளுக்குள், 35 லட்சம் ரூபாய் சம்பாதிக்க இயலாமல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், புதிய விதிமுறை அமலானால், இங்கிலாந்தில் உள்ள இந்திய செவிலியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024