Thursday, June 25, 2015

கருணைப் பணி நியமன வழக்கு : உயர்நீதிமன்றம் அபராதம்

மதுரை: கருணைப் பணி நியமனம் கோரி உரிய காலத்தில் விண்ணப்பிக்கவில்லை எனக்கூறி தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தது.புதுக்கோட்டை காந்திநகர் குமரேசன் தாக்கல் செய்த மனு: என் தந்தை பன்னீர்செல்வம். இவர் 2005 ல் அரசு ஊழியராக பணிபுரிந்தபோது இறந்தார். கருணைப் பணி கோரி 3 ஆண்டுகளுக்கு பின் அரசிடம் மனு செய்தேன்.

மனுவை நகராட்சி நிர்வாக தஞ்சாவூர் மண்டல இயக்குனர் 2013 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

உத்தரவு: மனுதாரர் தரப்பு ஆவணங்களை பார்க்கும்போது, தந்தை இறந்த 3 ஆண்டுகளுக்குள் பணி கோரி விண்ணப்பிக்கவில்லை. குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர் இல்லையெனில் மற்றவர்கள் சிரமப்படுவர் என்பதற்காகவே கருணைப் பணி வழங்கப்படுகிறது. இவ்வழக்கில் மனுதாரரின் தாய் ஒரு பணியில் இருந்துள்ளார். அவர்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமம் இல்லை.

மனுதாரர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை. எட்டு ஆண்டுகள் தாமதமாக, மனுதாரர் மேஜரான பின் கருணைப் பணி கோரப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் 2013 ல் நிராகரித்துள்ளனர். நீதிமன்றம் பணியாளர்களை தேர்வு செய்யும் ஏஜன்சி அல்ல என்பதை மனுதாரர் போன்ற நபர்கள் உணர வேண்டும். வாரிசு பணி நியமனம் அதற்குரிய விதிகளுக்குட்பட்டுத்தான் வழங்க முடியும். உரிய காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மனுவை தள்ளுபடி செய்கிறேன். 2000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன். தொகையை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றார். அரசு வழக்கறிஞர் மகேஷ்ராஜா ஆஜரானார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...