Thursday, June 25, 2015

வேலைக்கார பெண்ணுக்கு சூடு போட்டு சித்ரவதை: சிங்கப்பூர் வாழ் இந்திய பெண் சிறையில் அடைப்பு

Logo

சிங்கப்பூர், ஜூன் 25-

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணுக்கு கரண்டியால் சூடு போட்டும் அடித்து உதைத்தும் கொடுமைப்படுத்திய இந்திய பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுகந்தி ஜெயராமனும் (34), அவரது கணவரும் சிங்கப்பூரில் கடை வைத்துள்ளனர். இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த நாவ் மு டென் பாவ் என்ற 24 வயது இளம்பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரிடம் சுகந்தி கடுமையாக வேலை வாங்கியதுடன், சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கொடூரமாக நடந்துகொண்டுள்ளார்.

கரண்டியை பழுக்க காய்ச்சி சூடு போட்டும், தாக்கியும் 3 மாதங்களுக்கும் மேலாக அந்த இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளார். ரத்தக் காயம் ஏற்பட்டு துடித்தபோதும் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல், வேலை வாங்குவதிலேயே குறியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது சுகந்தி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுகந்திக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4900 சிங்கப்பூர் டாலர் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து சுகந்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

“வேலை செய்த பெண்ணும் தன்னைபோன்ற மனித உயிர் என்று நினைக்காமல் ஏதோ நடமாடும் பொருள் போன்று நினைத்து, கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற வகையிலும் நடந்துகொண்டுள்ளார். காயம் ஏற்படுத்தும் அளவுக்கு அவரை அடிப்பதற்கு நியாயமான எந்த காரணமும் இல்லை” என்று நீதிபதி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024