Wednesday, June 24, 2015

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன: நாளையுடன் கலந்தாய்வு முடிகிறது


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கை பொதுப் பிரி வினருக்கான 4-ம் நாள் கலந் தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு 646 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டன. 599 மாணவர்கள் மட்டுமே கலந்தாய் வில் பங்கேற்றனர்.

கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 125 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 180 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 33 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 338 இடங்கள் நிரப்பப்பட்டன. 261 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்தாய் வில் பங்கேற்று தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை வழங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர். வரும் 25-ம் தேதி (நாளை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவினருக்கான 4-ம் நாள் கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 253 எம்பிபிஎஸ்இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 36 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 212 எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பி விட்டன. அரசு ஸ்டான்லி மருத் துவக் கல்லூரியில் 26 எம்பிபிஎஸ் இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 23 இடங்கள் மற்றும் அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 16 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024