Tuesday, June 30, 2015

மெட்ரோ ரயில்: சிறப்பு அம்சங்கள் என்ன?




* மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

* தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால், நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்ற பிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.

* பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

* பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை.

* ஒவ்வொரு பெட்டியிலும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* அவசர காலத்தின்போது ஓட்டுநர்களுக்கு தகவல் தர சிறப்பு பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

* ரயில்கள் தடம் புரளாமல் இருக்க ரயில் பாதைகளில் தரமான சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 90 சதவீதம் மெட்ரோ ரயில்கள் தடம்புரள வாய்ப்புகளே இல்லை.

பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி

* மெட்ரோ ரயில் பெட்டிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் இருக்கும்.

* ஒரு மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் வீதம் ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக சராசரியாக 35 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும்.

* கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பயணம் நேரம் 19 நிமிடங்களாக இருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பின்னர், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

* அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க முடியும்.

கட்டண விவரம்:

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

*ஆலந்தூர் - ஈக்காட்டுதாங்கல்: ரூ10

*ஆலந்தூர் - அசோக்நகர்: ரூ.20

*ஆலந்தூர் - வடபழநி: ரூ.30

*ஆலந்தூர் - அரும்பாக்கம்: ரூ.40

*ஆலந்தூர் - சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40

*ஆலந்தூர் - கோயம்பேடு: ரூ.40

ரயில் பயண கால அட்டவணை:

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.

எத்தனை ரயில்கள்?

*தினசரி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 95 ரயில்கள் இயக்கப்படும்.

*அதேபோல் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 97 ரயில்கள் இயக்கப்படும்.

*நாளொன்றுக்கு மொத்தம் 192 ரயில்கள் இயக்கப்படும்.

*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.

*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.

*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024