Tuesday, June 23, 2015

சீனாவில் கொண்டாடப்படும் நாய் இறைச்சி திருவிழாவுக்கு கடும் எதிர்ப்பு; நூற்றுக்கணக்கான நாய்கள் மீட்பு




பீஜிங்,

சீனாவின் குவாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட யூலின் நகரில், ஆண்டுதோறும் நாய் இறைச்சி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோடை சங்கராந்தி என கொண்டாடப்படும் இந்த விழாவின் போது, சமைத்த நாய் இறைச்சியை, லெச்சி எனப்படும் உணவுடன் சேர்த்து மக்கள் உண்டு மகிழ்வர்.

சீனாவில் நாய் இறைச்சி உண்பது சகஜம் என்றாலும், இந்த விழாவின் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதால், இந்த விழாவுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி அங்கு நாய் இறைச்சி திருவிழா நடந்து வருகிறது.

இதற்காக அங்குள்ள இறைச்சிக் கடைகளில் ஏராளமான கூண்டுகளில் நாய்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும் தெருநாய்கள் மற்றும் வீடுகளில் இருந்து திருடி வரப்பட்டவை ஆகும். இந்த ஆண்டு 10 ஆயிரம் நாய்கள் வரை வெட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழா ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அங்குள்ள தன்னார்வ தொண்டர்கள் யூலின் நகர கடைகளில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நாய்கள் மற்றும் பூனைகளை மீட்டு வருகின்றனர். தியான்ஜின் நகரை சேர்ந்த யாங் சியாயுன் என்ற வயதான பெண் மட்டும், சுமார் ரூ.70 ஆயிரம் பணம் கொடுத்து 100 நாய்களை மீட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024