Wednesday, June 17, 2015

குப்பையில் பிளாஸ்டிக் பாட்டில்போட்டால் கிடைக்கும் வெகுமதி


புதுடில்லி:காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் கேன்களை குப்பைத் தொட்டியில் போட்டால், ஐந்து நிமிடத்துக்கான மொபைல் போன் ரீசார்ஜ் கூப்பன் வழங்கும் திட்டத்தை, டில்லி மாநகராட்சியும், தெற்கு டில்லி நகராட்சியும் துவக்கிஉள்ளன.'ப்யூஜ்டான் ஆசியா' எனும் நிறுவனத்துடன், இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக, லோதி கார்டன், கிரேட்டர் கைலாஷ், சாணக்யபுரி, நேரு பார்க், தால்கட்டோரா கார்டன், கோல்ப் லிங்க் மற்றும் கான் மார்க்கெட் உள்ளிட்ட ஏழு இடங்களில், நவீன குப்பை தொட்டிகள் வைக்கப்படும்.ஏ.டி.எம்., இயந்திரத்தை போன்று இயங்கும், இந்த நவீன குப்பை தொட்டியில், எட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது ஒரு கேன் போடும்போது, குப்பை தொட்டியில் உள்ள சென்சார் கண்காணித்து, ஐந்து நிமிட டாக் டைம் உள்ள கூப்பனை வெளியிடும்.நவீன குப்பை தொட்டிகளின் பராமரிப்பு மற்றும் ரீசார்ஜ் கூப்பன் வழங்கும் பணியை, ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளும். வரும் ஜூலை முதல், இந்த நவீன குப்பை தொட்டிகள் செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு, மாநகராட்சி திட்ட இயக்குனர் நீரஜ் பாரதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024