Tuesday, June 9, 2015

தரையிறக்கப்பட்ட விமானம்: தேனியால் வந்த வினை

லண்டன் : பிரிட்டனின், சவுத்தாம்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், தேவையற்ற, அன்னிய பயணியின் வருகையால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, ப்ளைபீ நிறுவனத்தை சேர்ந்த, பீ-384 என்னும் பயணிகள் விமானம், சவுத்தாம்டன் விமான நிலையத்தில் இருந்து டப்ளினுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே, சவுத்தாம்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும், சவுத்தாம்டன் விமான நிலையத்தில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றிய பின், பொறியாளர்கள் விமானத்தை சோதனையிட்டனர்.சிறிது நேர சோதனைக்குப் பின், விமானத்தின் பின்பகுதியில் பறந்து கொண்டிருந்த தேனீ கண்டுபிடிக்கப்பட்டது.தேனீயால் ஏற்பட்ட தாமதத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது. பின்னர், பயணிகளை ஏற்றிக்கொண்டு, விமானம் புறப்பட்டு சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024