Tuesday, June 9, 2015

வேலைவாய்ப்பில் வயது வரம்பு சலுகைஉயர்நீதிமன்றக் கிளை மறுப்பு


மதுரை:'வேலை வாய்ப்பில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது,' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
தேனி பெரியகுளம் கெங்குவார்பட்டி கனி தாக்கல் செய்த மனு: கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்று, 2002 ல் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக எந்த நேர்காணலுக்கும் அழைக்கவில்லை. மே 1 ல் மருத்துவ பணிகள் நியமன தேர்வு வாரியம் டிரைவர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டது. வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டியலில் என் பெயர் இல்லை.

ஜூலை 1 ஐ தகுதியாகக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைவிட, 24 நாட்கள் கடந்ததாகக்கூறி நிராகரித்தனர். வயது வரம்பை தளர்த்தி நேர்காணலில் பங்கேற்க அனுமதித்து, பணி நியமனம் வழங்க கலெக்டர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: மனுதாரருக்கு ஜூலை 1 நிலவரப்படி 24 நாட்கள் வயதுவரம்பு கடந்து விட்டது. மனுதாரருக்கு மட்டும் சலுகை காட்ட முடியாது. வயது வரம்பு உட்பட நிர்வாக முடிவுகளில் தலையிட முடியாது. சலுகை வழங்கினால் மனுதாரர் போல் பாதிக்கப்பட்டுள்ள பலர் சலுகை கோருவர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணதாஸ் ஆஜரானார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024