Tuesday, June 9, 2015

முதல் உலக விருது



பல வெற்றிப் படங்கள் 1959ல் ரிலீசாயின. ‘அவள் யார்’ போன்ற வித்தியாசமான படமும் வந்தது. ‘பாகப்பிரிவினை’ என்ற குடும்ப சித்திரமும் வெளியானது. ‘கல்யாணப் பரிசு’ மூலம் ஸ்ரீதர் டைரக¢டர் ஆனார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. அதே போல் வெளிநாடுகளிலும் தமிழ் சினிமாவின் பெருமையை நிலை நாட்டிய இன்னொரு படமும் இதே ஆண்டில் ரிலீசானது. சிவாஜி கணேசனின் நடிப்பு பசிக்கு தீனி போட்ட அந்தப்படம், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட மாவீரனின் வரலாறு படமானது. இது படமாகும் முன்பு பலமுறை நாடகமாக போடப்பட்டது. அதிலும் சிவாஜிதான் நடித்திருந்தார். கட்டபொம்மன் என்றதுமே மக்களுக்கு சிவாஜியின் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக¢கு இந்த கேரக்டராகவே சிவாஜியை மக்கள் பார்த¢தனர். படத்தில் நடித்தபடியே இந்த நாடகத்திலும் சிவாஜி நடித்தார். மாலை 5 மணி ஆகிவிட்டால், ஷூட்டிங்கிலிருந்து நேராக நாடக சபாவுக்கு சென்றுவிடுவார். மாலையில் இந்த நாடகத்தில் அவர் நடிப்பார். மாதத்தில் 25 முறை கண்டிப்பாக இந்த நாடகம் நடக்கும். அத்தனையிலும் சிவாஜி ஆஜர் ஆவார். மொத்தம் 100 நாட்களை இந்த நாடகம் கொண்டாடியது. 100வது நாளில்
அண்ணாதுரை பங்கேற்று, சிவாஜிக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார்.

இப்படியொரு வரலாற்று கதையை படமாக்க பிரமாண்ட நிறுவனமான ஜெமினி திட்டமிட்டது. ஆனால், அதற்கு முன்பே அதை திட்டமிட்டவர் பி.ஆர்.பந்துலு. இந்த படத்துக்கு அதிகம் செலவாகும், படமாக்குவதும் சுலபம் அல்ல என்பதால் பந்துலு இதை எடுக்க மாட்டார் என வாசன் நினைத்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை தயாரிக்கப் போவதாக வாசன¢ பத்திரிகையில் விளம்பரமும் தந்தார். அவர் விளம்பரம் தரப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்தார் பந்துலு. எனவே அதே தினம் இன்னொரு பக்கத்தில் சிவாஜியின் படத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பட விளம்பரத்தை தந்தார். வாசன் அசந்து போனார். சிவாஜிக்கு நிகராக வேறு யாராலும் நடிக்க முடியாது என்பதை வாசன் உணர்ந்திருந்தார். அதனால் இப்படத்தை பந்துலுவுக்கே விட்டுக் கொடுத்தார்.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பந்துலு தயாரித்து, இயக்கிய இப்படத்தின் தொடக்க விழாவில் ஜெமினி வாசன் கலந்துகொண்டு, பலருக்கு ஆச்சரியத்தை தந்தார். முதல் நாள் ஷூட்டிங்கையும் அவரே தொடங்கி வைத்தார். பந்துலு இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்தார். கெவா என்ற உயர்ந்த ரக கலரில் படம் தயாரிக்கப்பட்டது. முழு படத்தையும் பார்த்துவிட்டு, இதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலர் பிரிண்ட்டில் வெளியிட திட்டமிட்டார் பந்துலு. இந்த தொழில்நுட்பம், லண்டன் உட்பட வெளிநாடுகளில் மட்டுமே இருந்தது. இதற்காக இப்பட பிரிண்ட்டுகளை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து வெற்றிகரமாக பிரிண்டுகள் தயாராகி சென்னை வந்தன. இந்த பட ஷூட்டிங்கை குறுகிய காலத்தில் எடுக்க முடியுமா? என்று கூட பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் குறுகிய காலத்திலேயே ஷூட்டிங் நடத்தி முடித்ததும் சிறப்பம்சம்.

சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி, ஜெமினி கணேசன், ஜாக்சன் துரையாக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்தனர். கதை மற்றும் வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். இசை ஜி.ராமநாதன். திரைக்கதை, இயக்கம் பந்துலு. போர் காட்சிகள் படத்தின் ஹைலைட். வரி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து ஜாக்சன் துரையுடன் கட்டபொம்மன் பேசும் வசனங்கள்
தியேட்டரை அதிர வைத்தது.

இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விருதுக்கும் தேர்வானது. ஆனால், தேசிய விருதுக்கான சான்றிதழ் மட்டுமே தந்தார்கள். அதே நேரம் கெய்ரோ உலகப் படவிழாவில் போட¢டி பிரிவில் இப்படம் கலந்துகொண்டது. இப்பெருமையை பெற்ற முதல் தமிழ்ப் படம் இதுதான். விழாவின் கடைசி நாளில் பந்துலு, சிவாஜி, பத்மினி ஆகியோர் கெய்ரோ சென்றனர். விழாவில் விருதுக்கான படங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பல நாட்டு படங்கள் போட்டியில் இருந்தன. இதில் நம் படத்துக்கு எங்கே விருது கிடைக்கும் என மூவருமே சாதாரணமாக நிகழ்ச்சியை பார்த¢துக் கொண்டிருந்தனர். சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான விருதுகளை உருது மொழியில் அறிவித்து வந்தனர்.

பத்மினிக்கு இந்தி தெரியும் என்பதால் அவர் அதை உன்னிப்பாக கவனித்து வந்தார். சிறந்த நடிகர் என்ற விருதுக்கான அறிவிப்பு வந்தது. பந்துலு, சிவாஜி அமர்ந்திருந்த சேர்களுக்கு நடுவே பத்மினி அமர்ந்திருந்தார். அந்த அறிவிப்பை கேட்டதும் எழுந்து நின்றவர், துள்ளிக் குதித்தார். ÔÔஅண்ணே உங்களுக்கு விருது அறிவிச்சிருக்காங்கÕÕ என சத்தமாக சொல்ல, சிவாஜி, பந்துலு பிரமித்து போனார்கள். அவர்கள் இருவருக்குமே சந்தேகம். நம்ப முடியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. அன்று கெய்ரோ பட விழாவில் நம் தமிழர் விருது வாங்கினார். சிறந்த இசைக்காக ஜி. ராமநாதனுக்கும் கெய்ரோ விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு நாடு முழுவதும் பரவியது. ஆஸ்கர் விருது வாங்கியதற்கு நிகரான பெருமைய¤ல் தமிழ் சினிமா சந்தோஷத்தில் திக்குமுக்காடியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024