Wednesday, June 17, 2015

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள பிரச்சனை அதிகரிப்பு

logo


சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்தித்துவரும் சம்பள பிரச்சனை அதிகரித்து உள்ளது.

சிங்கப்பூரில் பணிசெய்துவரும் வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த ஆண்டு, 4,500 பேர் தங்களுக்கு வேலை வழங்கியவர்களுடன் உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசிடம் உதவியை நாடிஉள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சனையானது அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூரில் பணிசெய்துவரும் வெளிநாட்டவர்கள் அதிகபேர் தாங்கள் பணிசெய்யும் நிறுவனத்துடன் உள்ள பிரச்சனை தொடர்பாக புகார் அளித்து உள்ளனர் என்று சிங்கபூரில் சண்டே டைம்ஸ் செய்ந்தி நாளிதழ் செய்தி வெளிட்டு உள்ளது.

சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக தகவலின்படி சுமார், 4500 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க கோரி புகார் அளித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவே கடந்த 2013ம் ஆண்டு சுமார் 3,600 ஊழியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு பணியாளர்கள் மையத்திற்கு மட்டும் 2,000 புகார்கள் வந்து உள்ளது. இவையனைத்தும் சம்பள பிரச்சனை மற்றும் நியாயமற்ற பிடித்தங்கள் தொடர்பானவையே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 60-சதவீதம் புகார்கள் நியாயமற்ற பிடித்தங்கள் மற்றும் சம்பளம் பிடித்து வைத்திருப்பது தொடர்பானவையே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பளம் விவகாரத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சனையை தீர்க்க அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தொடங்கிஉள்ளது. அதிகமான புகார்கள் வந்து உள்ளதையடுத்து வெளிநாட்டவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளை தீர்க்க அவர்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான தகவல்களின்படி, சிங்கப்பூரில் 1.32 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிசெய்து வருகின்றனர் என்று தெரியவந்து உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, வங்காளதேசம், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளை சேர்ந்தவர்களே, அவர்கள் கட்டிடம் மற்றும் சுரங்கத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ள சிங்கப்பூர் அமைச்சகம், அடுத்தவருடத்தில் இருந்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொகை மற்றும் விதிமுறைகளை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்ற நிலையை கொண்டுவர உள்ளதாக தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024