Monday, October 10, 2016


உலக மனநல நாள் அக்டோபர் 10

# இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்.

# இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

# இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்துவருவது கவலையளிக்கிறது.

# பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர்.

# மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையைக் கொண்டிருக்கின் றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சிக்கவும் செய்கிறார்கள்.

மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள்:



> பிரிட்டன் பெண் நாவலாசிரியை வர்ஜீனியா ஊல்ஃப்

> பாலிவுட் இயக்குநர் குரு தத்

> ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ்

> பாலிவுட் நடிகை ஜியா கான்

# இந்தியாவில் 2001-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மன அழுத்தத்துக்கு எதிரான சிகிச்சை-மருந்து உள்ளிட்டவற்றின் சந்தை 528 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

# இந்தியாவில் இப்போது 3,500 உளவியல் நிபுணர்களே இருக்கிறார்கள். ஆனால், நம்முடைய மக்கள்தொகைக்கு 11,500 உளவியல் நிபுணர்கள் தேவை.

# இந்தியாவில் 2001-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மன அழுத்தத்துக்கு எதிரான சிகிச்சை-மருந்து உள்ளிட்டவற்றின் சந்தை 528 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

# இந்தியாவில் இப்போது 3,500 உளவியல் நிபுணர்களே இருக்கிறார்கள். ஆனால், நம்முடைய மக்கள்தொகைக்கு 11,500 உளவியல் நிபுணர்கள் தேவை.



மன அழுத்தம் முக்கிய அறிகுறிகள்:

> எதைப் பார்த்தாலும் எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்துவது

> சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது

> எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது

> எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக் குறைவு

> மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை

> குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூடத் தனித்திருப்பதாக உணர்வது



மன அழுத்தம் – மூளைக்குள் என்ன நடக்கிறது?

மூளை பின்மேடு (Hippocampus)

மூளையின் இந்தப் பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது.



உச்சித்தலை (Parietal lobe)

உணர்வுகளையும் பார்வை தகவல்கள், மொழி, கணிதம் போன்றவற்றை இப்பகுதியே செயல்படுத்துகிறது. மன அழுத்தத்தால் வளர்சிதை மாற்றத்தின் அளவு குறைவதால், உணர்வுகளை உணர்ந்துகொள்ளும் திறன் பாதிக்கப்படும்.



நார்எபிநெப்ரின் (Norepinephrine)

இது ஒரு நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோஃபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும்.



செரடோனின்

மன அழுத்தம் சம்பந்தப்பட்ட முக்கிய ஹார்மோன். இது மிகக் குறைவாக இருந்தால் – மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.



டோபமைன்

இதுவும் ஒரு நரம்பு கடத்தி (ஒரு நரம்பணுவில் இருந்து மற்றொரு நரம்பணுவுக்கு சமிக்ஞைகளைக் கடத்தும் வேதிப்பொருட்கள்). இது அதிகமானால் – மனச்சிதைவு. குறைந்தால் – மன அழுத்தம்.



முன்தலைப் பெருமூளை (Prefrontal cortex)

மூளையின் முன்பகுதியில் உள்ள இது கருத்து, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல்புக்கு மாறாக மிகவும் சோர்வடைந்துவிடுகிறது. முன்தலைப் பெருமூளையின் வலது பாதி, எதிர்மறை உணர்ச்சியை உருவாக்கக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது மிகவும் பலவீனமாக இருக்கிறது.



அமிக்டாலா (Amygdala)

மூளையின் உணர்ச்சிக் கேந்திரமான இது, அளவுக்கு அதிகச் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...