Thursday, October 20, 2016

ராமரை செருப்பால் அடிப்பேன்: மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு

DINAMALAR 
சென்னை: இந்த நாட்டில் மதச்சார்பின்மை இருப்பதால், ராமரை செருப்பால் அடிக்க எனக்கு உரிமை இருக்கிறது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகிறிஸ்து தாஸ் காந்தி கூறினார்.

சமீபத்தில் தந்தி டிவியில் ஒரு விவாதம் நடந்தது. அதில் ஒரு பேச்சாளராக கிறிஸ்துதாஸ் காந்தி கலந்து கொண்டார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர். தலைமை செயலாளர் கிரேடில் பதவி வகித்தவர்.
விவாதத்தின் போது, பாஜ பிரமுகர் ராகவன் பேச்சின் ஊடே குறுக்கிட்டுப் பேசிய கிறிஸ்துதாஸ், இந்த நாட்டில் மதச்சார்பின்மை இருக்கிறது. கடவுள் மறுப்பு கொள்கை உண்டு. ராமரை செருப்பால் அடிக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது என்றார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகவன், நான் வணங்கும் தெய்வத்தை செருப்பால் அடிப்பேன் என்று எப்படி நீங்கள் கூறலாம். இதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.



மக்கள் அதிர்ச்சி:


இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்த பலருக்கும் கிறிஸ்துதாஸின் பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதச்சார்பின்மை என்பது மற்றொருவர் வணங்கும் கடவுளை செருப்பால் அடிப்பது தானா; ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் இப்படி பேச அனுமதிக்கலாமா; எந்த தைரியத்தில் அவர் இப்படி பேசுகிறார்; இந்து மதத்தைத் தவிர வேறு மத கடவுள்களை செருப்பால் அடிப்பேன் என்று கூற இவரைப் போன்றவர்களுக்கு தைரியம் உண்டா; இந்து மதம் என்றால் இளக்காரமா என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பத் துவங்கி உள்ளனர்.



கடும் கண்டனம்:


கிறிஸ்துதாஸின் பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளன. பலர் பல்வேறு ஊர்களில் கிறிஸ்துதாஸ் மீது போலீசில் புகார் கூற ஏற்பாடு செய்து வருகின்றனர்.மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் கூறுகையில், பெயரிலேயே கிறிஸ்துவை வைத்துக்கொண்டு, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிக்கொண்டு, சலுகைகளுக்காக சான்றிதழ்களில் இந்து என வைத்துக்கொண்டு இருப்பவர் கிறிஸ்துதாஸ். ஒரு மதத்தினர் வணங்கும் தெய்வத்தை வாய்க்கு வந்தபடி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
தனக்குப் பிடித்த எந்த மதத்தையும் பின்பற்றத் தான் அரசியல் சாசனம் நமக்கு உரிமை கொடுத்துள்ளதே தவிர, இன்னொரு மதத்தைப் புண்படுத்த எந்த உரிமையும் தரப்படவில்லை. இதுகூட தெரியாமல் இவர் எப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார் எனவும் புரியவில்லை.
தமிழகம் முழுவதும் இவருக்கு கண்டனம் எழுந்து வருகிறது. எனவே, அந்தந்த ஊர் போலீஸ் நிலையங்களில் இவர் மீது புகார் கொடுக்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.

அவரது வீட்டு விலாசமான F-3, MIG BLOCK, FORESHORE ESTATE, PATTINAPAKKAM, CHENNAI - 600 028, (MOBILE: 94444 04525) என்ற விலாசத்திற்கும் பலர் கண்டன கடிதங்களை அனுப்பி வருகின்றனர்'' என்றார்.
இந்த விவாத வீடியோ வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...