ரூ.3 செலவில் ரயில் டிக்கெட் முன்பதிவு எப்படி செய்வது?
TNN | Updated: Thu, 20 Oct 2016 08:52:58 +0530
புதுடில்லி: இணையதள இணைப்பு இல்லாமல், வெறும் 3 ரூபாய் செலவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் தேவையில்லை:
இணையதள இணைப்பு உள்ளவர்கள் ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., வெப்சைட்டிலும், போனில் இணையதளம் வைத்துள்ளவர்கள் ரயில்வே செயலி (ஆப்ஸ்) மூலம் முன்பதிவு செய்துவருகின்றனர். ஆனால் இணையதள வசதி இல்லாதவர்கள் வெகுநேரம் ரயில்வே நிலையத்தில் காத்திருந்து, முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ரூ. 3 செலவில் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கள் மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு, முன்பதிவிற்கான தகவல்களை SMS அனுப்பி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
இந்த வசதியை பெற ஐ.ஆர்.சி.டி.சி., கணக்கு மற்றும் அதோடு ஒரு வங்கி கணக்கை இணைத்து கொள்ள வேண்டும். வங்கி கணக்கிற்கு பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை உபயோகிக்க வேண்டும்.
மேலும் SMS மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறைகளை பூர்த்தி செய்து பயணிகள், தங்கள் மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு SMS அனுப்பி, டிக்கெட் பதிவு செய்யலாம். இந்த முறையை பயன்படுத்தி, டிக்கெட்டை ரத்து செய்யவும் முடியும்.
No comments:
Post a Comment