Saturday, October 22, 2016

தமிழகத்தில் முதன் முறையாக வண்டலூரில் 6 வழிப்பாதை உயர்நிலை மேம்பாலம்: ரூ.55 கோடியில் அமைக்கப்படுகிறது; 2018-ல் பயன்பாட்டுக்கு வரும்


வண்டலூரில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ கத்திலேயே முதன்முறையாக ரூ.55 கோடியில் 6 வழிப்பாதைகள் கொண்ட உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் முதல் திருச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-45) தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான நெடுஞ் சாலையாக விளங்குகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாக னங்கள் இந்த தேசிய நெடுஞ் சாலையை பயன்படுத்துகின்றன.

எனினும், வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில் தினசரி குறைந்தது ஒரு வாகன விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துகளில் கடந்த சில ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வாகனங்கள் மோதலால், அடிக்கடி போக்குவரத்தும் ஸ்தம்பிக்கிறது.

பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக ஆங்காங்கே அமைக் கப்பட்டுள்ள சிக்னல்களால், சீரான போக்குவரத்து இல்லாமல் நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக வண்டலூர் சந்திப்பில் ரூ.55 கோடியில் உயர் நிலை மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 6 வழிப்பாதையுடன் கூடிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வண்டலூர் முதல் ஊரப்பாக்கம் மற்றும் கிளம்பாக்கம் வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறு கின்றன. மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக சாலையை சமன்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வண்டலூர் - கேளம்பாக்கம் சந்திப்பில் ரூ.55 கோடியில் மேம் பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மேம்பாலம் 6 வழிகளைக் கொண்டதாக அமைக்கப்படும். மேம்பாலத்தின் நீளம் 700 மீட்டர், அகலம் 24 மீட்டர் மற்றும் தற்போதைய சாலையின் நடுவே 9 தூண்கள் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் 2018-ல் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுக்கு முதலில் தீர்வு காணும் வகையில், தற்போது வண்டலூர் சந்திப்பு முதல் ஊரப்பாக்கம் வரை சாலை அகலப்படுத்தப்படு கிறது.

தமிழகத்தில் வேறு எங்கும் 6 வழிப்பாதையாக உயர்நிலை மேம்பாலம் இதுவரை அமைக்கப் படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ள மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், ‘2 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க அரசு தரப்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறை வடையும் வகையில் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள் ளன’ என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024