Monday, October 10, 2016

பயணம் இனிதாகவும், பதற்றமில்லாமலும் அமைந்திட வாழ்த்துகள் !

தீபாவளி விடுமுறைக்கு ஊருக்குச் செல்பவர்களின் கவனத்துக்கு...
பண்டிகைக் காலம் வந்து விட்டாலே கொண்டாட்டம் என்பதோடு, அதற்கான பயணம் குறித்த பதற்றம் நம்மிடம் தொற்றிக் கொள்வது இயல்புதான்.

முன்பெல்லாம் ஒற்றை மாட்டு வண்டியும், இரட்டை மாட்டு வண்டியும், சாரட்களும்தான் பயணத்தில் துணைக்கு வந்தது. பின்னர், பயணம் 'ட்ராம்' பெட்டிகளாய் மாறியது. இப்போதோ, 'முன்பதிவு, நெரிசல், தட்கல், ரயில் ஆம்னி, பேருந்து' என்று பல "ஹாஸ்-டாக்குகள்" கண்முன் தெரிகிறது.


போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப் படுவது, தீபாவளி. அதற்கான (தீபாவளி-2016-) நெரிசலைத் தவிர்க்க 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அக்டோபர் 26,27,28- ஆகிய தேதிகளில், சென்னையில் பேருந்துகள் நிறுத்துமிடத்தை மாற்றம் செய்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.



இணைப்புப் பேருந்துகள் இயக்கப் படுகிறது

இந்த தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


பேருந்து நிறுத்துமிடங்களில் மாற்றம்

ஆந்திரா மார்க்க பயணத்துக்கு : சென்னை அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையம்.

புதுச்சேரி,கடலூர் மார்க்க பயணத்துக்கு : சென்னை கோயம்பேடு (மாநில தேர்தல் ஆணையம்) பேருந்து நிலையம்.

தஞ்சை, கும்பகோணம் மார்க்க பயணத்துக்கு : தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்.

வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு பூவிருந்தவல்லி(பூந்தமல்லி) பேருந்து நிலையம்.

கோயம்பேட்டிலிருந்து எப்போதும் செல்லும் இந்தப் பட்டியலில் இடம் பெறாத இதர பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இருந்தே புறப்படும்.


750 சிறப்புப் பேருந்துகள்

தொடர்விடுமுறையை மனதில் கொண்டும், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்கு செல்வதாலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


கூடுதல் கட்டணம் வசூலித்தால்?

சிறப்பு பேருந்து சேவையை நேரில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத்துறை மந்திரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஏற்பாடுகள் குறித்து பயணிகளின் கருத்துகளைக் கேட்டார்.
ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், "அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.


ரயில்வேயிலும் ஏற்பாடுகள்

தீபாவளி பண்டிகைக்காக, கயா, வாரணாசி, அலகாபாத், டில்லி மற்றும் ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்று வரும் வகையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில், பாரத தர்ஷன் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து வரும், 25ம் தேதி இந்த ரயில், புறப்படுகிறது. திண்டுக்கல், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது.

கட்டணம் எவ்வளவு ?

மூன்றடுக்கு 'ஏசி' வகுப்புப் பயணத்துக்கு 13- ஆயிரத்து, 940 ரூபாய், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு, 10 ஆயிரத்து, 35 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. தென்னிந்திய சைவ உணவு வசதியும், செய்யப் பட்டுள்ளது.


சாலை வழியாக சுற்றிப் பார்க்க, வாகன வசதியும் கூடுதலாக செய்யப் பட்டுள்ளது. 12 நாட்கள் பயணச் சுற்றுலாவான இதற்கு தென்னக ரயில்வே உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல், ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்தை, 044 - 6459 4959 தொலைபேசி எண்ணிலும், 90031 40681 என்ற அலைபேசி (செல்போன்) வழியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வேகம் அதிகரிக்கப் பட்ட ரயில்களின் விபரம்:

42 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் இதில் அதிகரிக்கப் பட்டுள்ளது. 20 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேகம் அதிகரிப்பு(1)
ரெயில் எண் (16181) எழும்பூர்-மன்னார்குடி, சிலம்பு எக்ஸ்பிரஸ், (16714) ராமேஸ்வரம்-எழும்பூர் எக்பிஸ்பிரஸ், 22614 ஹால்டியா-சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 12665 ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 16128 குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிப்பு.
வேகம் அதிகரிப்பு(2)
16130 தூத்துக்குடி- எழும்பூர், 16184 தஞ்சாவூர்- எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், 16713 எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் , 16125 எழும்பூர்- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், 12693 எழும்பூர்- தூத்துக்குடி முத்துநகர்.
வேகம் அதிகரிப்பு (3)
22605 புருலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 16126 ஜோத்பூர்- எழும்பூர், 12663 ஹ‌வுரா- திருச்சி எக்ஸ்பிரஸ், 22603 கராக்பூர்-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 12631 எழும்பூர்- நெல்லை எக்ஸ்பிரஸ்.
16127 எழும்பூர்-குருவாயூர், 16863- பகாத்-கி- கோதி- மன்னார் குடி எக்ஸ்பிரஸ், 16864 மன்னார்குடி-பகாத்- கி-கோதி எக்ஸ்பிரஸ், 12632 திருநெல்வேலி-எழும்பூர்- நெல்லை.
வேகம் அதிகரிப்பு (4)
16101 எழும்பூர்- ராமேஸ்வரம், 16177 எழும்பூர்- திருச்சி மலைக் கோட்டை, 16178 திருச்சி-எழும்பூர் மலைக் கோட்டை, 16183 எழும்பூர்-தஞ்சாவூர் உழவன், 16723 எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
வேகம் அதிகரிப்பு (5)
16616 கோவை-மன்னார்குடி, 12605 எழும்பூர்-கானக்குடி பல்லவன், 12635 எழும்பூர்- மதுரை வைகை, 16176 காரைக்கால்-எழும்பூர், 16186 வேளாங்கன்னி- எழும்பூர், 16307 ஆழப்புழா- கண்ணூர், 16313 எர்ணா குளம்-கண்ணூர், 12606 காரைக்குடி-எழும்பூர் பல்லவன்.
12633 எழும்பூர்- கன்னியாகுமரி, 12668- நாகர்கோவில்-எழும்பூர், 16182 மன்னார்குடி- எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ், 12662 செங்கோட்டை- எழும்பூர் பொதிகை.
வேகம் அதிகரிப்பு (6)
16724 திருவனந்தபுரம்-எழும்பூர் அனந்தபுரி, 16860 மங்களூர்- எழும்பூர், 16333 வெரவால்- திருவனந்தபுரம், 16337 ஒகா-எர்ணாகுளம், 16338 எர்ணாகுளம்-ஒகா எக்ஸ்பிரஸ்.
சூப்பர் பாஸ்ட் ரயில்கள்
மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சூப்பர் பாஸ்ட் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
எழும்பூர்-ராமேஸ்வரம் (22661), ராமேஸ்வரன்- எழும்பூர், எழும்பூர்- ஜோத்பூர், ஜோத்பூர்-எழும்பூர்- சென்ட்ரல்-ஹபி, : ஹபி- சென்ட்ரல் உள்ளிட்ட 8 ரெயில் சூப்பர் பாஸ்ட் ஆக மாற்றம்.


பயணம் இனிதாகவும், பதற்றமில்லாமலும் அமைந்திட வாழ்த்துகள் !


ந.பா.சேதுராமன்

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...