Tuesday, October 25, 2016

கொண்டாடவிருப்பது ஹெல்தி தீபாவளியா? கொலஸ்டிரால் தீபாவளியா?!

healthy_diwali
தீபாவளி வந்தாலும் வந்தது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் கூட்டம், கூட்டமாக புத்தாடை பர்சேஸ், பண்டிகைப் பலகாரங்கள், ரிடர்ன் கிஃப்ட்ஸ், விழாக்கால சொந்த ஊர் பயணங்களுக்கான திட்டமிடல் என்று ஒரே பிஸியோ பிஸி! இதற்கு நடுவில் தான் வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளையும்கலந்து கட்டிப் பார்க்க வேண்டி இருப்பதால் அவரவர் உடல் நலன்களை பராமரிப்பதில் தீபாவளி முடியும் வரை பலதரப்பினரும் மெத்தனமாகத் தான் இருக்கிறார்கள் என்றால் அது பொய்யில்லை.
உடல் நலனுக்கென்று ஸ்பெஷலாக எதுவும் செய்யாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் நிறைய தண்ணீர் அருந்துங்கள், தினமும் அரைமணி நேரம் வாக்கிங் செல்லுங்கள், அது கூடப் போதுமானது என்கிறார் ஓரிஃபிளேம் இந்தியாவின் நியூட்ரிசன் எக்ஸ்பர்ட் 'சோனியா நரங்'. இதைக் கூட கடைபிடிக்கா விட்டால் பிறகு தீபாவளி முடிந்ததும் டாக்டர்களைத் தேடிக் கொண்டு ஓட வேண்டியது தான்.
ஹெல்தி தீபாவளி கொண்டாட ’சோனிய நரங்’ தரும் ஹெல்த் டிப்ஸ்கள்:
கவனம் செலுத்த வேண்டியவை:
தீபாவளி முடியும் வரை உணவுக்கு ரெஸ்டாரெண்டுகளை நம்பியிருக்கும் பெண்களின் கவனத்துக்கு:
தீபாவளியை எப்படியெல்லாம் சிறப்பாகக் கொண்டாடுவது என்று திட்டமிடுவது தொடங்கி தீபாவளி முடியும் வரை யாருக்கும் யோசிக்கக் கூட நேரமிருக்காது. முக்கியமான விசயம் வீட்டுச் சாப்பாடு என்பது தொல்லை மிகுந்த விசயமாக மாறி மூன்று வேலைக்கும் ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடத் தொடங்குவீர்கள். இதில் குழந்தைகள், பெரியவர்கள் பேதமெல்லாம் கிடையாது, பெண்கள், அவர்கள் இல்லத்தரசிகளானாலும் சரி, வேலைக்குப் போகும் பெண்களானாலும் சரி பர்சேஸ், பலகாரங்கள் தயாரித்தல் அதோடு கூடிய அலுவலக வேலைகள் போன்ற அலுப்புகளில் முறையாக சாப்பிடுவதிலிருந்து விலகி எளிதாக சாப்பாட்டை முடிப்பதாக எண்ணிக் கொண்டு நேரம் கெட்ட நேரத்தில் பீட்ஸா, பர்கர், சமோசா, பிரெட் ஜாம் என்று சாப்பிடத் தொடங்குவோம். குழந்தைகளுக்கும் அதையே தான் சாப்பிடத் தருவோம். இதெல்லாம் எதில் போய் முடியும்? அதிக்கப்படியான கொழுப்பு மிக்க உணவுகலை எரித்து மாளாமல் உடல் அவற்றை கொலஸ்டிரால்களாக திசுக்க ஒல்லி பெல்லிகளை ஃபேட்டி ஆன்ட்டிகளாக மாற்றத் தொடங்கும்.
ஆகவே தீபாவளி என்றில்லை எந்த விழாவுக்காக திட்டமிடுவதாக இருந்தாலும் பெண்களே முதலில் உங்கள் வீட்டு ஃப்ரிஜ்ஜில் நிறைய ஃப்ரெஷ் காய்கறிகள் மற்றும் பழங்களை நிரப்பிக் கொள்ளுங்கள், பிறகு எங்கே வேண்டுமானாலும் நேரம் செலவழித்து விட்டு சாப்பிட வீட்டுக்கே திரும்புங்கள். சமைக்க சோம்பலாக இருந்தால் தயவு செய்து பழங்களையும், காய்கறிகளையும் மட்டுமே கூட சாப்பிட்டு விட்டு மறக்காமல் வாக்கிங் செல்லுங்கள். முடிந்த வரை அதிகமாக தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள் என்கிறார் சோனியா நரங்.
ஆல்கஹாலால் விழாவைச் சிறப்பிக்க காத்திருக்கும் ஆண்களின் கவனத்துக்கு:
குடியில் விருப்பமே இல்லாத ஆண்கள் மேலே பெண்களுக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ்ஸையே பின்பற்றிக் கொள்ளலாம். கூடுதலாக ஸ்பெஷல் கேட்டகிரி லிஸ்டில் வரத் தகுதியான இந்த எக்ஸ்ட்ரா பத்தியை வாசிக்காமல் தவிர்த்தும் விடலாம். ஆல்கஹாலில் விருப்பமுள்ள ஆண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், விழாக்கால சிறப்புச் சலுகையாக ஆல்கஹாலில் பெரு விருப்பம் கொண்ட பேரின்பவாதிகள் தங்களுடைய ”குடி” படைக் கூட்டாளிகளுடன் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் குடித்து தீபாவளிக்கு சிறப்புச் செய்யலாம் என்று முன்பே திட்டமிடத் தொடங்கி இருப்பார்கள். இதுவும் தான் எதில் போய் முடியும்? தீபாவளி குடிக் கொண்டாட்டத்தில் நண்பர்களோடு கூடி ரகளையாக ட்ரிங் செய்கிறேன் பேர்வழியென்று முதலில் முட்டக் குடித்து விட்டு பிறகு சைட் டிஷ்களை மொக்குவோர் இருப்பார்கள், அவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி, குடிப்பது என்று முடிவு செய்து விட்டால் முதலில் ஹெல்தியாக சாப்பிட்டு விட்டுப் பிறகு குடிப்பீர்களாம். ஏனெனில் இரைப்பையில் இருக்கும் என்ஸைம்கள் குடித்து விட்டு எத்தனை ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் கூட ஆல்கஹாலைத் தான் முதலில் எரிக்கத் தொடங்குமாம். பிறகு நீங்கள் உண்பதெல்லாம் என்ன ஆகக் கூடும்?! காக்கா தூக்கிச் செல்ல அதென்ன பாட்டி சுட்ட வடையா? வயிற்றுக்குள் போன வஸ்துக்களாயிற்றே... ஆகவே கொழுப்பாக மாறி திசுக்களில் சேகரிக்கப் படும். இது தொடர்கதையானால் பின் நாட்களில் பைபாஸ், ஆஞ்சியோ என்று அவலாஞ்சிக்கு உள்ளாக்கும். எனவே குடிப்பதில் ஆர்வமுள்ள குடிமகன்களே கவனமாக இருப்பீர்களாக. என்று சொல்கிறார் சோனியா நரங்.
ஒரு நியூட்ரிசனிஸ்ட்டால் என்ன செய்ய முடியும்? ஆலோசனை மட்டுமே தர முடியும். அதைப் பின்பற்றி நம்மையும் நம் உடல் நலனையும் பாதுகாக்க வேண்டிய வேலை இனி நம்முடையது.  அவர் சொல்வதைச் சொல்லி விட்டார். போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும், குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது வாக்கிங் செல்வதும் அப்படியொன்றும் கஷ்டமான பராமரிப்பு வேலையில்லை தானே!  சரி...சரி  இனி வரப்போவது  தீபாவளியா? இல்லை தீபா’வலியா’? என்று  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024