Saturday, June 24, 2017

நாங்கள் சகோதரரர்கள்: பன்னீரை சந்தித்த தம்பிதுரை பேட்டி

பதிவு செய்த நாள்23ஜூன்
2017
20:56




டில்லியில் ஓ.பி.எஸ்.-தம்பித்துரை திடீர் சந்திப்பு

சென்னை: நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம் என தம்பிதுரை கூறினார். பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.வில் உள்ள அணியினர் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தன.
இது தொடர்பாக இன்று டில்லி சென்ற ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ராம்நாத் கோவிந்த வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்டனர்.

ஒற்றுமையாக உள்ளோம்

இந்நிலையில் இ.பி.எஸ். அணியைச் சேர்ந்த லோக்சபா துணை சபாநயகர் தம்பிதுரை கூறியது, பா.ஜ. கேட்டு கொண்டதன் பேரில் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். அ.தி.மு.க.வில் நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். டில்லியி்ல் ஓ.பி. பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். விரைவில் இரு தரப்பும் பேசி தீர்ப்போம். நாங்கள் சகோதரரர்கள், நாங்கள் அ.தி.மு.க. என்ற இயக்கத்தில் இரு அணியாக பிரியவில்லை. ஒரு அணி தான். அ.தி.மு.க. ஆட்சியை பினாமி ஆட்சி என தி.மு.க. சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Govt. doctors do critical brain surgery to treat aneurysm

Govt. doctors do critical brain surgery to treat aneurysm The Hindu Bureau TIRUCHI 10.01.2025 A team from the Department of Neurosurgery, K....