மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் முறையில் இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு
பதிவு: ஜூலை 05, 2017 17:05
மதுரை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழக அரசு 2017 -18ம் ஆண்டிற்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கையேட்டினை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் உள்ள 8 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரியின் 1650 இடங்கள் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலர், அந்த இடங்கள் மத்திய அரசு மூலம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.
மருத்துவ சேர்க்கை விதிப்படி ஒவ்வொரு மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் 15 சதவீத இடங்கள் மட்டுமே அனைத்திந்திய கோட்டாவின் கீழ் மத்திய அரசால் நிரப்பப்படும். மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்.
ஆனால் தற்போதைய கருத்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரியின் 85 சதவீத இடங்களை அந்தந்த கல்லூரியின் நிர்வாகக் கோட்டாவின் கீழ் நிரப்ப முயற்சி நடைபெறுகிறது. அந்த கல்லூரிகளில் ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது யூ.ஜி.சி நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தை விட அதிகமானது. எனவே நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரி இடங்களையும் கவுன்சிலிங் மூலம் நிரப்ப உத்தரவிட வேண்டும். அதுவரை அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இது குறித்து மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment