இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ 10 ஆயிரம் உயருகிறது: சட்டசபையில் அமைச்சர் தகவல்
பதிவு: ஜூலை 06, 2017 12:35
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்ததை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ. 10 ஆயிரம் உயரும் என கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பேசுகையில், இந்த ஆண்டு பொறியியல் கல்வி கட்டணம் உயருவதாக தகவல் வருகிறதே உண்மைய? தரம் இல்லாத பொறியியல் கல்லூரி எத்தனை இயங்குகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது:-
2016-2017-ம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் 2லட்சத்து 77ஆயிரத்து 61 இடங்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 599 மாணவர்கள் தான் சேர்ந்து உள்ளனர். பொறியியல் கல்லூரிகளின் தரத்தை அரசு நிர்ணயிப்பதில்லை. மாணவர்களே கல்லூரிகளை தேர்வு செய்கிறார்கள். தகுதியான ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் எந்தெந்த கல்லூரிகளில் உள்ளது, இல்லை என்பதைத்தான் அரசு சுட்டிக்காட்டுகிறது. கல்லூரி கட்டணத்தை பொறுத்த வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும். கடந்த 2012-13-ம் ஆண்டு கல்லூரி கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு 5 ஆண்டாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதற்காக நியமிக்கப்பட்ட கிருஷ்ணா கமிட்டி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார்கள். இதில் 3 வகையாக எக்ஸ், ஒய்,இசட் கல்லூரிகள் என வகைப்படுத்தியுள்ளனர். தொடக்க பிரிவுக்கு கல்வி கட்டணம் ரூ. 1,58,300, ஒய் பிரிவுக்கு ரூ. 1,50,500, இசட் பிரிவுக்கு ரூ. 1,44,900 என பரிந்துரை செய்துள்ளனர். அதற்கு மிகாமல் நிர்ணயம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்ததை விட ரூ. 10 ஆயிரம் கூடுதலாக வசூலிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். கவுன்சிலிங் வருபவர்களுக்கு ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் ஆகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருபவர்களுக்கு ரூ. 70 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும் உயர்த்த சொல்லி உள்ளனர். அதை அரசு பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment