ரூ.1.12 கோடியில் சூப்பர்பைக் வாங்கிய ஒரே இந்தியர்
பதிவு: ஜூலை 06, 2017 15:24
புதுடெல்லி:
இந்தியாவின் விலை உயர்ந்த சூப்பர்பைக்- டுகாட்டி சூப்பர்லெகெரா 1299 மாடலினை இந்தியர் ஒருவர் வாங்கியுள்ளார். உலகம் முழுக்க லிமிட்டெட் எடிஷன் மாடலாக வெளியிடப்பட்ட டுகாட்டி சூப்பர்லெகெரா 1299 விக்ரம் ஓபெராய் வாங்கியுள்ளார்.
விக்ரம் ஒபராய் ஏற்கனவே டுகாட்டி 1299 பேனிகேல் எஸ், டுகாட்டி 916 மற்றும் டுகாட்டி 1098 மாடல்களை வைத்துள்ளார். நாட்டின் விலை உயர்ந்த சூப்பர்பைக்கினை டுகாட்டி இந்தியா தலைமை நிர்வாகி ரவி அவலுர் ஓபெராயிடம் ஒப்படைத்தார்.
சர்வதேச சந்தையில் மொத்தம் 500 யுனிட்களை மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் அனைத்து யூனிட்களும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
டுகாட்டி 1299 சூப்பர்லெகெரா 215 Bhp திறன் கொண்டு சுமார் 156 கிலோ எடையில், இதுவரை தயாரிக்கப்பட்டதில் அதிக திறன் கொண்ட ட்வின்-சிலிண்டரை கொண்டுள்ளது. இத்தகைய செயல்திறனை இயக்க முழுமையான எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதில் டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல் இவோ (DTC EVO), டுகாட்டி ஸ்லைடு கண்ட்ரோல் (DSC) வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் டுகாட்டி பவர் லான்ச் (DPL) கொண்ட முதல் டுகாட்டி சூப்பர் பைக் ஆகும். இத்துடன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்ட இன்ஜின் பிரேக் கண்ட்ரோல் வசதி இந்த மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை கட்டுக்குள் வைக்க காலிபரேட்டெட் போஷ் கார்னரிங் ABS சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 1299 சூப்பர்லெகெரா வாங்கும் போது டிராக் கிட் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதில் டுகாட்டி செயல்திறன் ஊக்குவிக்கும் பாகங்கள், டைட்டானியம் அக்ராபோவிக் ரேசிங் எக்சாஸ்ட், ரேசிங் ஸ்கிரீன், பிளேட் ஹோல்டர் ரிமுவல் கிட் மற்றும் மிரர் ரீபிளேஸ்மென்ட் பிளக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
ஓபெராய் குழும ஒட்டல்ளின் தலைமை நிர்வாகிகளில் ஒருவரான விக்ரம் ஒபராய், 'உலகின் தலைசிறந்த மோட்டார் சைக்கிள்களை டுகாட்டி உருவாக்கி வருகிறது, மேலும் டுகாட்டி வாடிக்கையாளராக இருப்பது பெருமையாக உள்ளது.' என தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க 500 யுனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட 1299 சூப்பர்லெகெரா, உலகின் தலைசிறந்த பிரத்தியேக மோட்டார் சைக்கிள் ஆகும். சூப்பர்பைக் வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றியமைக்கும் வகையில் ஈடு இணையில்லா தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதனை விக்ரமிற்கு வழங்குவதில் பெருமையாக உணர்கிறோம் என டுகாட்டி நிறுவன இந்திய நிர்வாக தலைவர் ரவி அவலுர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment