Wednesday, October 4, 2017

ஆப்பரேஷன் தியேட்டரிலும் திரையிடப்பட்ட, 'பாகுபலி'
பதிவு செய்த நாள்03அக்
2017
20:04

குண்டூர்: இந்திய திரையரங்குகளில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பிரமாண்ட வெற்றி பெற்ற, பாகுபலி படம், ஆந்திராவில் உள்ள, ஒரு மருத்துவமனையின் ஆப்பரேஷன் தியேட்டரிலும் திரையிடப்பட்டது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, குண்டூரைச் சேர்ந்த நர்ஸ், விஜயகுமாரிக்கு, 43, மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கூறியதாவது: மயக்க மருந்து தராமல், சுயநினைவுடன், இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அதற்காக, ராஜமவுலி இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், ராணா, நடிகையர் அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த, பாகுபலி படத்தை லேப் - டாபில் திரையிட்டு, அதை, விஜயகுமாரி பார்த்து கொண்டிருந்த போதே, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது, இந்த அறுவை சிகிச்சைக்கு, 'பாகுபலி அறுவை சிகிச்சை' என, பெயரிட்டு உள்ளோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024