ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை, அவர் வசித்த, சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஆரம்பமாக உள்ளது. விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப் பட்ட, நீதிபதி ஆறுமுகசாமி, நேற்று பொறுப் பு ஏற்றார். விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்ப வேண்டிய நபர்களின், பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், முதல் நடவடிக்கையாக, 'ஜெ., மரணம் தொடர்பாக, வரும், 22க்குள் கமிஷனில் தகவல் தெரிவிக்கலாம்' என, பொது மக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்; அங்கு, டிச., 5 இரவு இறந்தார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான புகைப்படம் எதுவும், அரசு தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ வெளியிடப்படவில்லை. அவருடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே
இருந்தனர்; வேறு யாரும் அனுமதிக்கப் படவில்லை.
சி.பி.ஐ., விசாரணை:
அதனால், அவர் இறப்பில் சந்தேங்கள் எழுப்பப் பட்டன. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, ஓ.பன்னீர்செல்வம், 'இது பற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த பட வேண்டும்' என்றார். அப்போதெல்லாம், அமைச்சர்கள் அனைவரும், சசிகலாவுக்கு ஆதரவாக பேசினர். தற்போது, அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், பன்னீர் செல்வம் கோரிக்கையை ஏற்று, 'ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, கமிஷன் அமைக்கப் படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்களும், தங்களது நிலைப்பாட்டை மாற்றினர்.
'நாங்கள் யாரும் மருத்துவமனையில், ஜெ.,வை பார்க்கவில்லை; சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர்.நாங்கள் கூறியது எல்லாமே பொய்' என்றனர்.இந்நிலையில், ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுக சாமி தலைமையில் கமிஷன் அமைத்து, செப்., 25ல், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். கமிஷன் அமைக்கப் பட்டு, ஒரு மாதம் நிறை வடைந்துள்ளது.
கமிஷனுக்கு, சென்னை, எழிலகத்தில் உள்ள, கல்சா மஹால் முதல் தளத்தில் அறை ஒதுக்கப் பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி தன் அலுவலகத்திற்கு வந்தார்.அலுவலகத்தில்,
நாற்காலி எதுவும் போடப் படாமல் இருந்தது.
எனவே, பசுமை தீர்ப்பாய பதிவாளர் அறைக்கு சென்று அமர்ந்தார். உடனடியாக ஊழியர்கள், அவரது அலுவலகத் தில், ஒரு மேஜை, நாற்காலியை போட்டனர். அதன்பின், அவர் தன் அறைக்கு சென்றார். இதையடுத்து, ஜெ., மரணம் தொடர்பாக, தகவல் கூற விரும்புவோருக்கு அழைப்பு விடுத்து, முதல் அறிக்கை வெளியிட்டார்.
தகவல் கூறலாம்:
அதில், அவர் கூறி உள்ளதாவது:கடந்த ஆண்டு செப்., 22ல், ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற் கான சூழ்நிலைகள் மற்றும் நிலைமை குறித்தும், அவர் துரதிருஷ்ட வசமாக இறந்த நாளான, டிச., 5 வரை, அவருக்கு அளிக்கப்பட்ட, அடுக்கடுக் கான சிகிச்சைகள் குறித்தும் விசாரிப்பதற்காக, கமிஷன் அமைக்கபட்டுள்ளது.இது தொடர்பாக, தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர் களும், நேரடித் தொடர்பு உடையவர் களும், அவர்களுக்கு தெரிந்த தகவலை கூறலாம்.
அதை, சத்தியப் பிரமாண உறுதிமொழி பத்திர வடிவில், தகுந்த ஆவணங்களுடன், இரண்டு நகல்களுடன், நவ., 22 அல்லது அதற்கு முன், நேரடியாக அல்லது தபால் வழியாக, கமிஷனுக்கு அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரும், 30ம் தேதி முதல் நேரடி விசாரணையை, நீதிபதி துவங்க உள்ளார்.
முதல் விசாரணையை, ஜெ., வசித்த, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து துவங்க திட்டமிட்டுஉள்ள அவர், சசிகலா குடும்பத்தினர், மருத்துவ மனை நிர்வாகிகள், மருத்துவர்கள், அமைச்சர் கள் என, பல தரப்பினருக்கும், 'சம்மன்' அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பட்டியல் தயாரிப்பு பணி, தீவிரமாக நடந்து வருவதாக தெரிகிறது.இது குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், ''ஜெ., மரணம் தொடர்பான விசாரணை, வெளிப் படைத் தன்மையுடன் நடத்தப்படும். அரசு வழங்கியுள்ள காலத்திற் குள், விசாரணையை முடிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment