Saturday, October 7, 2017


போதை பழக்கத்தை விட திரிசூலத்தில் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் இலவச சிகிச்சை முகாம்

By DIN | Published on : 06th October 2017 03:34 PM

போதை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவர ஏதுவாக மருத்துவ முகாம் ஒன்றை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் மனநல மருத்துவ துறையும் “மனசு” என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து 695/2, வைத்தியர் தெரு, திருசூலம், சென்னையில் நாளை (அக்டோபர் 7) நடத்துகிறது.

இந்த தனியார் தொண்டு நிறுவனம் அங்குள்ள ஆண், பெண்கள் சிறுவர்களுக்கு பல மனநல பிரச்சினைகள் இருப்பதும் போதை பழக்கம் அதிகமாக உள்ளதையும் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருத்துவ முகாமில் போதை, பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதிலிருந்து வெளி வருவதற்கான மருந்துகள் வழங்கப்படும். தொடர்ந்து சிகிச்சை விரும்புபவர்கள் போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் பெறலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024